ஜான் ப்ரான்சிஸ் ஜாக் வெல்ஷ் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவராக இருபது ஆண்டுகள் இருந்தவர்.
இவர் தலைவராக இருந்த காலத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மதிப்பு நாலாயிரம் மடங்கு உயர்ந்தது. 10,500 டாலர்கள் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த இவர் சிஇஓ-வாக இருந்து வேலையைவிட்டு வெளியேறும் போது அதற்காக கொடுக்கப்பட்ட பணம் அமெரிக்க கார்ப்பரேட் சரித்திரத்திலேயே மிகப்பெரிய தொகையான 417 மில்லியன் டாலர்கள்.
பணியாளர்களின் பங்களிப்பு குறையும் போது வெளியேற்றுவதில் ஈவு இறக்கம் காட்டாதவர். 1980ல் 4,11,000 பேர் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலையில் இருந்தார்கள்.
இவர் சிஇஓ ஆகி 5 வருடங்களுக்கு பின்னால் அது 2,99,000 ஆக குறைந்தது. மிடில் கிளாஸ் மனிதர்களிடமும், பணியாளர்களிடமும் கடுமையான குணம் காட்டுபவர் என்ற விமர்சனமும் இவருடைய பெயரில் இருந்தது.
1. உங்கள் நிறுவனம் மிகப்பெரியது, ரொம்பவும் சிஸ்டமேட்டிக் என்று மற்றவர்கள் சொன்னார்கள் என்றால் உங்கள் வளர்ச்சி தடைபட்டுவிட்டது என்று அர்த்தம்.
2. நிஜத்தை நிஜமாக சந்தியுங்கள். உங்கள் எண்ணத்திற்கு ஏற்பவோ, அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ நிஜத்தை மாற்ற நினைக்காதீர்கள்.
3. தொழிலில் போட்டிபோடுவதற்கான தகுதிகள் உங்களுக்கு இல்லையென்றால் போட்டியில் குதிக்காதீர்கள்.
4. தவறுகளும் வெற்றிகளுக்கு இணையான ஆசான்களே.
5. பிசினஸில் உங்கள் விதியை நீங்கள் கன்ட்ரோலில் வைக்கவில்லை என்றால் அதை வேறு யாரோ கன்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
6. மேனேஜ்மெண்ட் என்பது ஒரே நேரத்தில் குறுகிய காலத்திற்கு மேனேஜ் செய்வதும் நீண்ட காலத்திற்கு திட்டமிடுவதுமேயாகும்.
7. நீ இதுக்கு லாயக்கு படமாட்டாய் என பணியாளர்களிடம் சொல்ல முடியாத மேனேஜர் மிகப்பெரிய கோழை.
8. மாறவேண்டிய கட்டாயம் வருவதற்கு முன்னாலேயே மாறிவிடுங்கள்
9. வேலை-வாழ்க்கை இடையே சமநிலைப் படுத்துதல் (வொர்க் லைப் பேலன்ஸ்) என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை. ஒன்று வேலை. இல்லாவிட்டால் வாழ்க்கை.