வணிக வீதி

கச்சா எண்ணெய்

செய்திப்பிரிவு

பெட்ரோலிய பொருட்கள் இல்லாமல் ஒரு நாளை கடப்பது என்பது வெகு சிரமம். உலக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு முதல் இடம். பெட்ரோலிய பொருட்கள் தேவை இல்லையென்றால் ஒரு நாடு மற்றொரு நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. வல்லரசு நாடு என்ற பதம் இருக்காது. இந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்களின் தேவையும் அதை சார்ந்த வளர்ச்சியும் இருக்கிறது.

தற்போதுதான் அடுத்த கட்ட நகர்வாக உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை குறித்து சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவமும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் புதுப்பிக்கமுடியாத ஆற்றல் வளங்களின் தேவைகள் குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. வளங்களும் குறைந்து கொண்டே வருகிறது. உலக நாடுகள் இந்த சூழலை எவ்வாறு சாமாளிக்க போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் பற்றியும் சில தகவல்கள்…..

வரலாறு

> 40,000 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எளிதில் தீப்பற்றக்கூடிய பிடுமன் என்ற பொருள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதேபோன்ற பொருளை 0,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியில் மெகர்காக் என்ற இடத்தில் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் எண்ணெய் கினறு வெட்டப்பட்டதாக ஹெரடோட்டஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

> கி.பி 347 - சீனாவில் முதல் எண்ணெய் கினறு வெட்டப்பட்டது. 800 அடி ஆழத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மூங்கில் மரங்களை கொண்டு இந்த எண்ணெய் கினறு வெட்டப்பட்டுள்ளது.

> 1264 – மத்திய பெர்சியா நாட்டில் எண்ணெய் கினறு வெட்டப்பட்டதாக மார்க்கோ போலோ தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.

> 1500-களில் போலாந்து நாட்டில் கார்பத்தியான் மலைகளில் எண்ணெய் வளம் இருக்கிறதா என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டனர். இறுதியில் மிகப் பெரிய எண்ணெய் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

நவீன வரலாறு

> 1760-1840 ஆண்டுகளில் உலகம் முற்றிலும் மாறியிருந்தது. புதிய தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரிக்க தொடங்கியது.

> தொழிற்புரட்சியின் விளைவாக புதிய புதிய இயந்திரங்கள், இரும்பின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவை கண்டறியப்பட்டன. அதன்பிறகு இயந்திரங்களை நிலக்கரி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

> 1846-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆப்ரகாம் ஜெஸ்னர் என்பவர் நிலக்கரி, பிட்டுமனஸ், ஷேல் ஆயில் ஆகியவற்றில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பும் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய், மண்ணெண்ணய் போன்றவை நன்கு எரியும் பண்புகளை பெற்றிருந்தது.

> 1848-ம் ஆண்டு செம்யானவ் என்ற ரஷ்ய பொறியாளர் அப்ஸ்ஹரன் தீபகற்பத்தில் 21 மீட்டர் ஆழத்துக்கு எண்ணெய் கினற்றை வெட்டினார். 1861-ம் ஆண்டு வரை இந்த கினறுதான் சர்வதேச அளவில் 80 சதவீத எண்ணெய்யை உற்பத்தி செய்து வந்தது.

> அமெரிக்கா பென்சில்வேனியா நகரத்தில் முதல் எண்ணெய் கினறு வெட்டப்பட்டது. ஒரு நாளைக்கு 25 பீப்பாய் எண்ணெய் இந்த > கினற்றிலிருந்து எடுக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி

1859 – 2,000 பீப்பாய்

1869 – 42,15,000 பீப்பாய்

1879 – 1,99,14,146 பீப்பாய்

1889 – 3,51,63,513 பீப்பாய்

1899 – 5,70,84,428 பீப்பாய்

1906 – 12,64,93,936 பீப்பாய்

சர்வதேச எண்ணெய் உற்பத்தி (ஒரு நாள் உற்பத்தி)

1980 – 60,000 பீப்பாய்

1985 – 54,000 பீப்பாய்

1990 – 63,000 பீப்பாய்

1995 – 65,000 பீப்பாய்

2000 – 68,700 பீப்பாய்

2005- 72,500 பீப்பாய்

2010 – 74,000 பீப்பாய்

2015 – 79,000 பீப்பாய்

கச்சா எண்ணெய் விலை (பீப்பாய்க்கு)

1869- 55 டாலர்

1909- 15 டாலர்

1959- 22 டாலர்

1999- 18 டாலர்

2004- 35 டாலர்

2009- 94 டாலர்

கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள்

> சவூதி அரேபியா

> ரஷ்யா

> அமெரிக்கா

உலகில் 80 சதவீத எண்ணெய் கினறுகள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளன.

சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமீரகம், கத்தார், ஈராக் ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பங்களிப்பு 63 சதவீதம்.

          
SCROLL FOR NEXT