வணிக வீதி

வெற்றி மொழி: ஜோசப் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

1878 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியன் அரசியல் தலைவர். பின்தங்கிய நாட்டை தொழில்துறை மற்றும் இராணுவத்தில் வல்லரசாக மாற்றியவர். 1920களின் மத்தியிலிருந்து 1953ல் இறக்கும்வரையிலான காலகட்டத்தில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரியாக இருந்தார். இவருடைய பொருளாதார திட்டங்களால் ரஷ்யாவில் பெரும் தொழில்புரட்சி ஏற்பட்டது என்றும், அதேசமயம் பாதகமான விளைவுகளையும் உண்டாக்கியது என்றும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராகவும், இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான கொடூரமான தலைவராகவும் அறியப்படுகிறார்.மரணமே அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு. மனிதன் இல்லையேல் பிரச்சினையும் இல்லை.

# வாக்குகளைச் செலுத்தியவர்கள் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை, வாக்குகளை எண்ணுபவர்களே தீர்மானிக்கிறார்கள்.

# நான் யார் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை, என் மீதும் கூட.

# கல்வி என்பது ஒரு ஆயுதம் போன்றது.

# எழுத்தாளர் என்பவர் மனித ஆன்மாவின் பொறியாளர்.

# பட்டு கையுறைகளைக் கொண்டு உங்களால் புரட்சியை உருவாக்க முடியாது.

# நான் ஒரு விஷயத்தை மட்டுமே நம்புகிறேன், அது மனித சக்தி.

# எண்ணங்கள் துப்பாக்கிகளை விட அதிக சக்தி வாய்ந்தவை.

# ஹீரோக்கள் வரலாற்றினை உருவாக்குவதில்லை, ஆனால் வரலாறு ஹீரோக்களை உருவாக்குகிறது.

# எங்கு மனிதன் இருக்கிறானோ, அங்கு பிரச்சினையும் இருக்கிறது. எங்கு மனிதன் இல்லையோ, அங்கு பிரச்சினையும் இல்லை.

# எந்த வெல்லமுடியாத படைகளும் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.

SCROLL FOR NEXT