வணிக வீதி

வெற்றி மொழி: ஹெலன் கெல்லர்

செய்திப்பிரிவு

1880 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஹெலன் கெல்லர் புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர். சிறு வயதிலேயே கண் பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறைபாடுகளுடன் படித்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை உடையவர். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமையால், இளம் வயதிலேயே பிரெய்லி முறையில் ஆங்கிலம் மட்டுமின்றி பல மொழிகளையும் கற்றார். கட்டுரைகள், புத்தகங்கள் என எழுத்துலகின் மிகச்சிறந்த படைப்புகளைக் கொடுத்துள்ளார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் போராடியுள்ளார்.

உலகின் சிறந்த மற்றும் அழகான விஷயங்களைப் பார்க்கவோ, தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் உணர வேண்டும்.

சுய இரக்கமே நமது மோசமான எதிரி, இதை வளர விட்டோமானால் நம்மால் இந்த உலகில் விவேகமான எதையும் செய்ய முடியாது.

நம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று.

மகிழ்ச்சியை உருவாக்காமல் அதை அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

சூரிய ஒளியை நோக்கி உங்களது முகத்தை வைத்துக்கொள்ளுங்கள், உங்களால் நிழலைப் பார்க்க முடியாது.

பார்வையின்மை பொருட்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது; காது கேளாமை மக்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது.

வெளிச்சத்தில் தனியாக நடந்து செல்வதைவிட, இருளில் நண்பருடன் நடந்து செல்வது சிறந்தது.

கல்வியின் மிக உயர்ந்த பலன் சகிப்புத் தன்மையே.

தனியாக நாம் சிறிய அளவே செயல்பட முடியும்; ஒன்றாக நாம் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

உலகில் மகிழ்ச்சி மட்டுமே இருந்திருந்தால், ஒருபோதும் நாம் துணிச்சல் மற்றும் பொறுமையை கற்றுக்கொண்டிருக்க முடியாது.

நான் எதை தேடிக் கொண்டிருக்கிறேனோ அது வெளியில் எங்கும் இல்லை, எனக்குள்ளேயே உள்ளது.

இருள், அமைதி போன்ற எதுவாயினும் தனக்கான அழகினை தன்னகத்தே கொண்டுள்ளது.

உறுதி மற்றும் நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

SCROLL FOR NEXT