வணிக வீதி

வேலை... வேலை... வேலை...

செய்திப்பிரிவு

விஸ்வாதன் வேலை வேண்டும் என்ற சினிமா பாடல் மிகப் பிரபலம். அந்த காலந்தொட்டு தற்போது கணிணி யுகம் வரை வேலை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. படித்து முடித்து விட்டதுமே நம் உறவினர்கள் முதல் தெரிந்தவர்கள் வரை அனைவரும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி என்ன வேலை கிடைச்சுருச்சா? இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. ஆனால் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா என்றால் இல்லை.

இதற்கு காரணம் வாய்ப்புகள் குறைவாக இருப்பதே. வருடந்தோறும் பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களுக்கான வேலைவாய்ப்பு மிகக் குறைவு. அதுமட்டுமல்லாமல் பொறியியல் கல்வியும் தரமானதாக இல்லை. இதனால் குறைவான சம்பளத்தில் கண்ணில் ஏராளமான கனவுகளோடு ஏதோ ஒரு வேலையை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது 86 இலட்சம் இளைஞர்கள் தமிழக வேலைவாய்ப்பகத்தில் பதிந்துள்ளார்கள். இது தவிர 10 லட்சம் பொறியாளர்கள் வேறு. 400 விஏஓ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானால் 8 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இதிலிருந்தே வேலைவாய்ப்பின்மையின் வீரியத்தை புரிந்து கொள்ளமுடியும். அரசு நிர்வாகம்தான் இதனை சரிசெய்ய முயற்சி செய்யவேண்டும்.

இந்தியாவில் ஊழியர்களின் வேலை நேரம் சராசரியாக 8.1 மணி நேரமாக உள்ளது.

ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிற சம்பளம் அவர்களின் 5 மணி நேர உழைப்புக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 3 மணி நேரம் சம்பளம் இல்லாமல் உழைக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை போக்குவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

SCROLL FOR NEXT