வணிக வீதி

பெண் சிஇஓ

செய்திப்பிரிவு

பெரும்பாலும் பெண்களுக்கு ஆசிரியர் வேலை அல்லது அரசு அலுவலகத்தில் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று நம் பெற்றோர்கள் நினைப்பதுண்டு. பெண்கள் அதிகம் சிரமப்பட கூடாது என்ற காரணத்தினால் அவ்வாறு நினைப்பார்கள். ஆனால் அந்தக் காலம் தற்போது மாறிக் கொண்டே வருகிறது. ஆம் பெண்கள் எல்லாத் துறைகளிலும் களம் இறங்கி சாதனை புரியத் துவங்கிவிட்டார்கள். முக்கியமாக தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு அதிக பெண்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் கீழ்நிலையிலிருந்து முன்னேறி தலைமைப் பொறுப்பை அடைந்தவர்கள். அவர்களை பற்றி சில தகவல்கள்…..

இந்திரா நூயி

#பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

#இன்று உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் முன்னணியில் உள்ள இந்திரா நூயி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

#சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மெட்ராஸ் கி றிஸ்டியன் கல்லூரி ஆகியவற்றில் படித்தவர்.

#முதன் முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் தான் தனது பணியைத் தொடங்கினார்.

#பின்பு மோட்டோரோலா, ஆஸா பிரவுன் போவேரி ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

#1994-ம் பெப்ஸிகோ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

#1997 ஆம் ஆண்டு அதன் உணவுவிடுதிகள் விற்பனையை டிரைகானுக்கு மாற்றியது உள்ளிட்ட பெப்சிகோவின் மறுகட்டமைப்பில் முன்னிலை வகித்தார்.

# இப்படி பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து 2001-ம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாகவும் பின்பு சிஇஓ-வாகவும் பதவி உயர்வு பெற்றார்.

# இவரது ஆண்டு வருமானம் 128 கோடி ரூபாய்

மேரி பாரா

# ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

# அமெரிக்காவில் மிச்சிகன் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்தவர். இளங்கலை படிப்புக்கு பின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.

# பின்பு அங்கு பணிபுரிந்து கொண்டே ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை முடித்தார்.

# ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மேரி பாரா 2014ம் ஆண்டு சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

# போர்ப்ஸ் நிறுவனத்தின் 100 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.

# இவரது ஆண்டு வருமானம் 191 கோடி ரூபாய்.

விர்ஜினியா ரொமெட்டி

# 100 வருடத்தை கடந்த ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி.

# கணினி அறிவியல் துறையில் இளங்கலை முடித்த விர்ஜினியா ரொமெட்டி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். இங்கு பத்தாண்டுகள் பணிபுரிந்த பின்பு ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

# கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அனலிட்டிக்ஸ் தொழில் சிறப்பாகச் செயல்பட்டார். துணைத்தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ரொமொட்டிக்கு 2011-ம் ஆண்டு சிஇஓ பதவி வழங்கப்பட்டது.

# இவரது ஆண்டுச் வருமானம் 129 கோடி ரூபாய்

மேக் விட்மேன்

# ஹியூலட் பக்கார்டு (ஹெச்பி) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

# நியூயார்க் நகரில் பிறந்த மேக் ஹார்வேர்டு மற்றும் எம்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் கல்லூரி படிப்பை முடித்தார்.

# ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த மேக் பிறகு வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

# இபே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் 30 பணியாளர்களும் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். பின்பு மேக் தலைமைச் செயல் அதிகாரியாக பணி உயர்வு பெற்ற பின் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து நிறுவனத்தின் பணியாளர்களை 15,000 ஆக உயர்த்தினார்.

# 2011-ம் ஆண்டு ஹெச்பி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற மெக் 2013-ம் ஆண்டு புளூம்பெர்க் வெளியிட்ட சாதனைப்படைத்த சிஇஓ-க்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

# இவரது ஆண்டுச் வருமானம் ரூ.129,34,94,685

சாந்தா கொச்சார்

# ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி.

# எம்பிஏ படித்துள்ள சாந்தா கொச்சார் 1984-ம் ஆண்டு ஐசிஐசிஐ நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தவர்.

# பிறகு ஐசிஐசிஐ வங்கி அமைக்கும் குழுவில் இடம்பெற்றார். வங்கி அமைப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சாந்தா கொச்சார் ஐசிஐசிஐ வங்கியின் உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு தலைவராக பொறுப்பேற்றார்.

# பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த சாந்தா கொச்சாருக்கு 2009ம் ஆண்டு சிஇஓ பதவி வழங்கப்பட்டது.

# பார்ச்சூன் இதழ் வெளியிட்ட சர்வதேச அளவில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

# இவரது ஆண்டு வருமானம் ரூ. 6.59 கோடி

ஷிகா சர்மா

# இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி.

# ஐஐஎம் அகமதாபாத் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

# ஐசிஐசிஐ வங்கியில் 29 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அந்த வங்கியில் தலைமை பதவி சாந்தா கொச்சாருக்கு வழங்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறி ஆக்ஸிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றார்.

# இவரது தலைமையில் ஆக்சிஸ் வங்கியின் வர்த்தகம் 2012-13-ம் ஆண்டில் 30 சதவீத வளர்ச்சி அடைந்து 5,500 பில்லியன் டாலராக உயர்ந்தது. வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1,500 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 8,300 ஆகவும் உயர்ந்தது.

# தற்போது பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்

# இவரது ஆண்டு வருமானம் ரூ. 5.10 கோடி

SCROLL FOR NEXT