நாளுக்கு நாள் நாம் வாழ்வதற்கு உண்டான செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடுகையில் கிராமம், நகரம் என வேறுபாடு இல்லாமல் அடிப்படைத் தேவைகளுக்கான செலவு அதிகரித்து வந்துள்ளது. இன்றைய நாளில் மிகக் குறைவான பணத்தை வைத்துக் கொண்டு வாழக்கூடிய நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்ஜெட்டில் அன்றாட தேவைகளையும் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதில் குறிப்பிட்ட சில நாடுகளை பற்றிய தகவல்கள்…..
கணக்கீடு
சில அடிப்படை தகவல்களை வைத்துக் கொண்டு வாழ்வதற்கு குறைந்த செலவாகும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
வாங்ககூடிய திறன் குறியீடு (Local purchasing power index)
வாடகை குறியீடு (Rent index)
உணவு பொருட்கள் குறியீடு (Groceries index)
நுகர்வோர் விலை குறியீடு (Consumer price index)
என நான்கு அளவுகோள்களை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோள்கள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தோடு ஒப்பிடப்பட்டு பின்பு எந்த நாடு குறைவாக உள்ளதோ அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல் 20 இடங்களை பிடித்த நாடுகள்
1. இந்தியா
2. சவூதி அரேபியா
3. பெலிஸ்
4. லிபியா
5. மெக்ஸிகோ
6. எகிப்து
7. பாகிஸ்தான்
8. துனிசியா
9. தென் ஆப்பிரிக்கா
10. மாசிடோனியா
11. போசினியா
12. போலந்து
13. மலேசியா
14. உக்ரைன்
15. செக் குடியரசு
16. மால்டோவா
17. நேபாளம்
18. ஜாம்பியா
19. ஜியார்ஜியா
20. ரோமானியா
இந்தியா
தலைநகரம்- புதுடெல்லி
தனிநபர் ஜிடிபி – 1,850 டாலர்
# உலகிலேயே வாழ்வதற்கு மிக குறைந்த செலவாகும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட 121 கோடி மக்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம், உணவு உற்பத்தி என பல்வேறு காரணிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
# அரபு நாடுகளில் மிக சக்தி வாய்ந்த நாடுகளுள் சவூதி அரேபியா முக்கிய பங்கை வகிக்கிறது. மொத்தம் 28.7 மில்லியன் மக்கள் அரபு மொழி பேசுகின்றனர். கச்சா எண்ணெய் உற்பத்தி இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெண்களுக்கு கட்டுப்பாடு போன்ற பல பழமை வழக்கங்கள் இன்னும் நீடிக்கின்றன.
# மத்திய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ளது பெலிஸ். கரீபியன் கடலை எல்லையாகக் கொண்டது. காயே கால்கர் மிகக் குறைவான தீவு கேட்வே-யாக உள்ளது. ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கிறது.