வணிக வீதி

இந்திய ஐடி துறை - எதிர்காலமும்... வேலைவாய்ப்புகளும்...

செய்திப்பிரிவு

பொறியியல் பிரிவில் எந்த பட்டத்தை பெற்ற மாணவராக இருந்தாலும், சாப்ட்வேர் உருவாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்கிற ஆசை உள்ளுக்குள் இருக்கவே செய்யும். காரணம், நல்ல ஊதியம், பணி உயர்வு, பணி கலாசாரம் போன்றவை ஐடி துறையை நோக்கி ஈர்க்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் ஐடி துறையின் பங்களிப்பு அதிகம். இந்திய ஜிடிபியில் ஐடி மற்றும் பிபிஓ ஆகிய துறைகளின் பங்கு மட்டும் 9.5 சதவீதமாக உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் ஐடி துறையில் வேலை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் திறமை குறைவாக இருப்பதால் புதிய ஊழியர்களை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய ஐடி துறை பெரும்பாலும் அவுட்சோர்சிங்கை நம்பியே இருக்கிறது. ஹெச் 1 பி விசா கட்டுப்பாடுகள் சர்வதேச பொருளாதார மந்தநிலை போன்றவை இந்த துறையின் வளர்ச்சியை அச்சுறுத்தி வருகின்றன. இந்த சவால்களை இந்திய ஐடி துறை எப்படி கடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஹெச்1பி விசா மீதான புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஹெச்1பி விசா மீதான புதிய நடைமுறைகளின் அடிப்படையில், ஒரு பணியாளர் அமெரிக்காவிற்கு வேலைக்காகச் செல்ல, அவருடைய வருட சம்பளம் 1,30,000 டாலர்களாக இருக்க வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் வருடத்திற்கு சுமார் 88 லட்ச ரூபாய். மாதத்திற்கு 6 முதல் 7 லட்ச ரூபாய். இம்மசோதா அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால், இந்திய ஐ.டி துறைக்குப் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் ஒரு சாரார். மற்றொரு பக்கம், இது இந்தியாவிற்கு நன்மையே என்கின்றனர் சில வல்லுனர்கள். இந்த சிக்கல் நீடித்து வரும் வேளையில் இன்ஃபோசிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைத் தர திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT