வணிக வீதி

பொருள் புதுசு: ஸ்மார்ட் பெல்ட்

செய்திப்பிரிவு

ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடக்கிறோம். எவ்வளவு நேரம் உட்காருகிறோம் என்பது நம்மில் பலர் கணக்கில் கொள்வதில்லை. நாம் தினந்தோறும் அணியக்கூடிய பெல்ட்டில் இத்தகைய வசதியை தற்போது கொண்டு வந்துள்ளனர். இந்த ஸ்மார்ட் பெல்ட்டை நமது மொபைல் போனோடு இணைத்துக் கொள்ள வேண்டும். நமது இடுப்பின் அளவு, நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

சிறிய நாற்காலி

15 நொடிகளில் இந்த மர நாற்காலியை மடக்கி வைத்து விடலாம். மேலும் இதை டேபிளாகவும் பயன்படுத்த முடியும். சுற்றுலா பயணத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மிகக் குறைந்த எடையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கார்ப்

குளிர்காலங்களில் தலைக்குட்டை (ஸ்கார்ப்) கட்டிக்கொள்வது சிலருக்கு பழக்கமாக இருக்கும். இதில் புதிய முயற்சியாக வெப்பத்தை வெளிப்படுத்தும் தலைக்குட்டையை உருவாக்கியுள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரம் இயங்கும்.

கண்காணிப்பு கருவி

தொட்டியில் செடிகளை வைத்த பிறகு அதற்கு அதிகமாக கவனம் செலுத்துவதில்லை என்பதென்னவோ உண்மை. விடுமுறையில் அதிக நாள் வெளியூர் சென்று விட்டால் தண்ணீர் ஊற்றாமல் செடி வாடிவிடும். அந்தக் குறையை போக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய குழாய்களை தண்ணீர் நிறைந்த வாளியுடனும் இந்த கருவியுடனும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் செடிகளுக்கு ஊற்ற வேண்டுமோ அதை இந்த கருவியில் பதிந்து விட்டால் சரியான நேரத்திற்கு தானாக தண்ணீர் ஊற்றும்.

SCROLL FOR NEXT