வணிக வீதி

வெற்றி மொழி: நார்மன் வின்சென்ட் பீலே

செய்திப்பிரிவு

1898ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த நார்மன் வின்சென்ட் பீலே அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மத குருமார். நேர்மறை சிந்தனைகள் தொடர்பான தனது கோட்பாடுகளை புத்தகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களிடம் கொண்டுசேர்த்தார். ஊக்கமளித்தல், சிந்தனைகள், நம்பிக்கை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான இவரது படைப்புகள் உலகளவில் பெரும் புகழ்பெற்றவை. இவரது “தி பவர் ஆப் பாசிடிவ் திங்கிங்” என்ற புத்தகம், இருபதாம் நூற்றாண்டில் விற்பனையில் பெரும் சாதனை படைத்த புத்தகங்களுள் ஒன்று. மேலும், இது பல உலக மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.

# உங்கள் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் உங்கள் உலகத்தை மாற்றுங்கள்.

# வெற்றிக்கான நான்கு விஷயங்கள்: உழைப்பு, பிரார்த்தனை, சிந்தனை மற்றும் நம்பிக்கை.

# உங்களை மாற்றிக்கொள்ளுங்கள், உங்கள் செயல்பாடு மாறுபட்ட தோற்றமுடையதாக இருக்கும்.

# சந்தோசத்தின் ஒரு பகுதி போர்களில் சண்டையிடுவதில் இல்லை, போரை தவிர்ப்பதில் உள்ளது.

# ஒவ்வொரு பிரச்சினையும் அதற்கான தனிப்பட்ட தீர்விற்கான விதையை தன்னகத்தே கொண்டுள்ளது.

# சுவாரஸ்யத்துடன் இருங்கள், ஆர்வமாக இருங்கள் மற்றும் அதிகமாக பேசாமல் இருங்கள்.

# நமது மகிழ்ச்சியானது, நம் மனதின் பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதைப் பொறுத்தது.

# நாம் சிக்கல்களுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம், எளிமைகளை தவிர்த்துவிடுகிறோம்.

# உங்களை நம்புங்கள். உங்கள் திறமைகளின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

# புரிந்துகொள்ளும் ஆற்றலின் மூலம் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

# உங்கள் வாழ்க்கையை வாழுங்கள், உங்கள் வயதைப்பற்றி மறந்துவிடுங்கள்.

# உற்சாகத்தில் ஒரு உண்மையான மாயவித்தை உள்ளது.

# உங்கள் தனிப்பட்ட சக்திகளின்மீது தாழ்மையான, நியாயமான நம்பிக்கை இல்லாமல், உங்களால் வெற்றிகரமாகவோ அல்லது சந்தோசமாகவோ இருக்க முடியாது.

SCROLL FOR NEXT