வணிக வீதி

வெற்றி மொழி: ரிச்சர்ட் பிரான்சன்

செய்திப்பிரிவு

1950-ஆம் ஆண்டு பிறந்த ரிச்சர்ட் பிரான்சன் என்னும் ரிச்சர்ட் சார்லஸ் நிக்கோலஸ் பிரான்சன் பிரிட்டனைச் சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் கொடையாளர். நானூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய விர்ஜின் குழுமத்தின் நிறுவனர். இளம் வயதிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது. இதற்கான அடித்தளத்தை தனது பதினாறாவது வயதில் ஸ்டுடண்ட் என்னும் பத்திரிகையின் மூலம் உருவாக்கினார். வணிகம் தொடர்பான இவரது கருத்துகள் பிரபலமானவை. மேலும், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். தொழில்நுட்ப கவுரவ டாக்டர் பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

# உங்களது தோல்விகளின் மூலம் தடுமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள், அவற்றிடமிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் தொடங்குங்கள்.

# வெற்றி மற்றும் தோல்விக்கு இடையே, பிளவிற்கான மிக மெல்லிய கோடு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

# பணமே வெற்றிபெறுவதற்கான ஒவ்வொரு தொழில்முனைவோரின் அளவீடு என்ற தவறான கருத்து உள்ளது.

# வணிகத்தில், நீங்கள் ஒரு தவறான முடிவினை எடுத்துவிட்டதாக உணர்ந்தால், அதை மாற்றிவிடுங்கள்.

# விதிகளைப் பின்தொடர்ந்து நடக்கக் கற்றுக்கொள்ளாதீர்கள், செயல்பாடு மற்றும் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

# உங்களின் சொந்த தொழிலை தொடங்குவது என்பது வெறுமனே ஒரு பணி அல்ல – அது வாழ்க்கைக்கான வழி.

# ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதே வாழ்க்கைக்கான எனது பொதுவான அணுகுமுறையாக உள்ளது.

# நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதன் மூலமே உங்களுடைய உண்மையான வெற்றி அளவிடப்படவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

# இலக்கினை அடைவதற்கு எப்படி அணுகக்கூடாது என்பதற்கான பாடமாக தோல்வியை எண்ணவேண்டும்.

# ஒவ்வொரு வெற்றிகரமான தொழிலதிபரும் தடைகளையும் தோல்விகளையும் அனுபவித்திருப்பார்கள். அப்படியில்லை என்று அவர்கள் கூறினால், அவர்கள் பொய் சொல்கிறார்கள்.

# உங்களது செயல்பாட்டினை நிறுத்த முடிவுசெய்தால் மட்டுமே, தோல்வி உங்களுக்கு இறுதியானது.

# பயத்திலிருந்து மீள்வதே தொழில் முனைவோர்களின் வெற்றிக்கான முதல் படியாக உள்ளது.

SCROLL FOR NEXT