வணிக வீதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை: குவியும் வேலைவாய்ப்புகள்

செய்திப்பிரிவு

உலக நாடுகள் அனைத்தும் தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை நோக்கி நடைபோட ஆரம்பித்து விட்டன. அதிலும் குறிப்பாக பாரீஸ் உச்சி மாநாட்டுக்கு பிறகு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடுகள் அதிகம் வருகிறது. இதன் காரணமாக இந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதையை சூழலில் சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை 81 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் இந்த துறையில் 4.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்தத் துறையில் எந்தெந்த பிரிவில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன பற்றி ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி 2015-ம் ஆண்டில் சூரிய மின்கலம் தொழில்நுட்ப பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT