வணிக வீதி

வெற்றி மொழி: ஜான் லாக்

செய்திப்பிரிவு

1632ஆம் ஆண்டு முதல் 1704 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜான் லாக் இங்கிலாந்தை சேர்ந்த தத்துவஞானி, முற்போக்கு படைப்பாளர் மற்றும் மருத்துவர். மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவராக பரவலாக அறியப்படுகிறார். இவரது கருத்துகள் அறிவு தத்துவம் மற்றும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்கு செலுத்தின. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உருவாக்கம், நவீன மேற்கத்திய தத்துவம் மற்றும் பிரெஞ்சு மறுமலர்ச்சி ஆகியவற்றில் இவரது கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தின. மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவராயினும், மிக அரிதாகவே அப்பணியில் ஈடுபட்டார்.

# ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தனிப்பட்ட சொத்து. இதில் அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.

# நமது வருமானம் நமக்கான காலணிகளைப் போன்றது. அது மிகச்சிறியதாக இருந்தால், இறுக்கிப்பிடிக்கும்; அது மிகப்பெரியதாக இருந்தால், தடுமாறச்செய்யும்.

# கல்வியே ஒரு நல்ல பண்புள்ளவனின் உருவாக்கத்திற்கு தொடக்கத்தைக் கொடுக்கின்றது.

# புதிய கருத்துகள் எப்பொழுதுமே சந்தேகிக்கப்படுகிறது மற்றும் எவ்வித காரணமும் இல்லாமல், பொதுவாக எதிர்க்கப்படுகின்றது.

# பெரியவர்களின் பேச்சுகளைவிட, ஒரு குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய உண்டு.

# கிளர்ச்சியானது மக்களின் உரிமை.

# ெல்வத்திற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் சொர்க்கத்திற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.

# அனைத்து செல்வமும் தொழிலாளியின் உற்பத்திப்பொருளே.

# மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மனிதனுக்கான வேலை.

# மனோபலமே மற்ற நற்பண்புகளுக்கான பாதுகாவலனாகவும், ஆதரவாளனாகவும் உள்ளது.

# வலிமையான உடலிலுள்ள வலிமையான மனமே, இந்த உலகில் மகிழ்ச்சியான நிலைக்கான முழு விளக்கமாகும்.

# மனிதர்களின் செயல்பாடுகளே, அவர்களின் எண்ணங்களின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதை நான் எப்போதும் நினைப்பதுண்டு.

SCROLL FOR NEXT