வணிக வீதி

மின்சாரமயமாக்கல்

செய்திப்பிரிவு

உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றுதான் அடிப்படை தேவைகள் என்றிருந்தன. ஆனால் தற்போது அடிப்படை தேவைகளின் பட்டியல் நீண்டுவிட்டது. சுத்தமான தண்ணீர், தேவையான மின்சாரம் என பட்டியல் அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக மின்சாரம் இல்லாமல் ஒரு நாளை கடப்பதென்பது மிக மிக சிரமமானது. ஆனால் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கடந்தும், இந்தியாவில் அனைவருக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றும் பல கிராமங்கள் வெளிச்சம் இல்லாமலும் மின்சாரத்தின் பயனை அறியமுடியாமலும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையை போக்கவேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைவருக்கும் மின்சாரம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதா என்பதையும் ஆராய வேண்டும். இந்தியாவில் மின்சாரமயமாக்கல் பற்றிய சில தகவல்கள்…

# 2022-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலிருந்து 175 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

# இதில் 100 ஜிகா வாட் மின்சாரம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.

# இந்தியாவில் மின்சார வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 16,677.

# இவற்றில் ஒடிசா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் மின்சார வசதி இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 3,449

# இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி திறன் (Installed capacity) 3,19,606.30 மெகாவாட்

# இந்தியாவில் 60 சதவீத மின்சாரம் நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. 22 சதவீத மின்சாரம் ஹைட்ரோ – எலெக்ட்ரிக் முறையில் தயாரிக்கப்படுகிறது.

# 2015-16-ம் ஆண்டின்படி இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வு 1,074 கிலோ வாட் - 1971-ம் ஆண்டு இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வு 98 கிலோவாட்

# ஒவ்வொரு வருடமும் மின்சார உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்தாலும் இந்தியாவில் தனிநபர் எரிசக்தி நுகர்வு குறைவாக இருக்கிறது.

# வீடுகளுக்கும் விவசாயத்துக்கும் விட தொழில் நிறுவனங்களுக்கு அதிகமான மின்சாரம் செலவு செய்யப்படுகிறது.

# புதைப்பொருள் ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தியின் பங்கு 67.6 சதவீதம்

# புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தியின் பங்கு 30.3 சதவீதம்

# புதைபொருள் ஆற்றல் உற்பத்தில் நிலக்கரி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பங்கு 58.26 சதவீதம்

# மொத்த மின்சார உற்பத்தியில் மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் மூலம் ஏற்படும் மின்சாரம் இழப்பு 22.4 சதவீதம்

# 2015-16-ம் ஆண்டில் வீடு மற்றும் வாழும் இடங்களில் மின்சார நுகர்வின் பங்கு 22.97 சதவீதம்

2015-16-ம் ஆண்டில் தொழில் நிறுவனங்கள் மின்சார நுகர்வின் பங்கு 44.20 சதவீதம்

2015-16-ம் ஆண்டில் விவசாயத்தில் மின்சார நுகர்வின் பங்கு 18.17

# மொத்த மின்சார உற்பத்தியில் தனியார் துறையின் பங்கு 42 சதவீதம்

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி திட்டம்

> 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

> வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்

> இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள நிதியுதவி 924 கோடி ரூபாய்

24*7 அனைவருக்கும் மின்சாரம்

> 2019-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார இணைப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்

> வீடுகளுக்கு மட்டுமல்லாமல் விவசாய நிலங்களுக்கு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார இணைப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டது.

> அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய மின்சாரம், நீர் மின்சாரம் ஆகியவற்றிலிருந்து இந்த இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உஜாலா திட்டம்

> சாதாரண புளோரசண்ட் பல்புகளுக்கு பதிலாக எல்இடி பல்புகள் வழங்குவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்

> 20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.

> ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது

> மின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5,000 மெகாவாட் குறைப்பது

> நுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடியைக் குறைப்பது.

> பசுமை இல்ல வாயு (கார்பன்-டை ஆக்ஸைடு) வெளியேற்ற அளவை ஆண்டுக்கு 7.9 கோடி டன் குறைப்பது போன்றவை இந்த திட்டத்தின் இலக்குகள்.

உதய் திட்டம்

> மின்சார பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்கவும், அவற்றை புதுப்பிக்கவும் வழிவகைசெய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

# நாட்டின் மின் பகிர்மான நிறுவனங்களின் நஷ்டம் ஏறக்குறைய 3,80,000 கோடி ரூபாய். இவற்றை லாப பாதையில்இயக்குவதற்கு இந்த திட்டம் வழிகாட்டும்.

SCROLL FOR NEXT