வணிக வீதி

சிறகுகளை விரிக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறையில் ஜப்பான் நிறுவனங்களுக்குப் போட்டியாக விளங்கும் வெகுசில இந்திய நிறுவனங்களே உள்ளன. ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ இவற்றுடன் தென்னிந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஒன்றாகும்.

இந்நிறுவனம் சமீபகாலமாக தனது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியச் சந்தையில் அந்நிறுவனத் தயாரிப்பு களை உற்பத்தி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

விரைவிலேயே பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் நிறுவனத்தின் மைசூர் ஆலையிலிருந்து இந்திய சாலைகளில் வலம் வர உள்ளன.

இந்நிலையில் மத்திய அமெரிக்க நிறுவனமான எம்ஏஎஸ்இஎஸ்ஏ-வுடன் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் குவாடிமாலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் கள் இப்பிராந்தியத்தில் மிகவும் பிரபலம்.

இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் மத்திய அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும்.

டிவிஎஸ் மோட்டார்ஸுடனான ஒப்பந்தம் காரணமாக எம்ஏஎஸ்இஎஸ்ஏ நிறுவனம் டிவிஎஸ் தயாரிப்புகளை குவாடிமாலா, எல்சால்வடார், ஹோண் டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா உள் ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யும்.

இப்பிராந்தியத்தில் எம்ஏஎஸ்இஎஸ்ஏ நிறுவனத்துக்கு 500 விற்பனையகங்கள் உள்ளன.

முதல் கட்டமாக 5 காட்சியங்கள் மற்றும் விற்பனை மையங்கள் இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தப்படும். இதில் டிவிஎஸ் மோட்டார்ஸின் அனைத்து தயாரிப்புகளுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கும். அத்துடன் விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் வசதியும் அளிக்கப்படும். அத்துடன் எம்ஏஎஸ்இஎஸ்ஏ கூட்டமைப்புக்கு உள்ள 500 விற்பனையகங்களில் டிவிஎஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கும்.

டிவிஎஸ் மோட்டார்ஸின் ஆட்டோ டிவிஎஸ் கிங் டிஎல்எக் மற்றும் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110, வீகோ 110 மற்றும் அபாச்சே உள்ளிட்ட 8 வகை மோட்டார் சைக்கிள்களும் இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT