வணிக வீதி

சர்க்கரை இனிப்பான பின்னணி

செய்திப்பிரிவு

அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்று சர்க்கரை. இனிப்பு சுவைக்காக பல பயிர்களிலிருந்து சர்க்கரை பிரித்தெடுக்கப்பட்டாலும் கரும்புதான் பிரதானமான பயிர். உலக அளவில் அதிக உற்பத்தி செய்யப்படும் பணப்பயிர்களில் கரும்பும் ஒன்று. உலக அளவில் கரும்பு விவசாயத்தில் இந்தியா இரண்டாவதாக உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கரும்பு உற்பத்தி அதிகம். உலக நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. 1500 ஆம் ஆண்டுகளிலேயே ``வெள்ளை தங்கம்’’ என்று அழைக்கப்பட்ட சர்க்கரை வர்த்தகம் குறித்தும் உற்பத்தி குறித்தும் சில இனிப்பான தகவல்கள்…

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தெற்காசிய பசிபிக் பகுதிகளில்தான் கரும்பு முதன் முதலாக பயிரிடப்பட்டது.

கி.மு.500 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். பப்புவா நியூ கினியா நாட்டிலும் சர்க்கரை உற்பத்தி ஆரம்பமானது. இது கி.மு.100ம் ஆண்டில் சீனாவிற்கும் பரவியது.

1492-ம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்னர் கானரி தீவுகளில் சில நாட்கள் தங்கியிருக்கும் பொழுது அந்த தீவின் இளவரசர் கரும்பு நாற்றுகளை அவருக்கு கொடுத்தார். அதன் மூலமாகத்தான் அமெரிக்காவிற்கு கரும்பு பரவியது.

வெள்ளை சர்க்கரை தயாரிப்பு முறையை குப்தர் காலத்திலேயே உருவாக்கி விட்டனர்.

எரிபொருள் தேவையை எத்தனால் மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது.

உலகளவில் மொத்த கரும்பு உற்பத்தி 18,77,105 ஆயிரம் மெட்ரிக் டன்

பிரேசில் 7,39,267,

இந்தியா 3,41,200,

பாகிஸ்தான் 63,750,

மெக்ஸிகோ 61,182,

கொலம்பியா 34,876,

சீனா 1,25,536,

தாய்லாந்து 100,096

இந்தோனேசியா 33,700

பிலிப்பைன்ஸ் 31,874

அமெரிக்கா 27,906

சர்வதேச அளவில் தனிநபரின் தினசரி சர்க்கரை நுகர்வு 24 கிராம்

அதிக ஏற்றுமதி செய்யும் நாடு பிரேசில். தனது மொத்த உற்பத்தியில் 35 சதவீதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு சீனா. மொத்தம் 79,00,000 மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்கிறது.

அதிகமாக சர்க்கரையை உபயோகிக்கும் நாடு அமெரிக்கா. அங்கு தனிநபரின் தினசரி நுகர்வு சராசரியாக 126 கிராம்.

அதிக கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகள் (ஆயிரம் மெட்ரிக் டன்)

சர்க்கரை இரண்டு பயிர்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது

சர்க்கரைவள்ளி கிழங்கு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாடுகள்

கரும்பு சர்க்கரைவள்ளி கிழங்கு கரும்பிலிருந்து சர்க்கரையை பிரித்தெடுக்கும் பொழுது கிடைக்கக்கூடிய பொருள் எத்தனால். இதனை எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எரிபொருளை விட எத்தனால் பயன்படுத்துவதால்

90% கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 642 உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை

இந்தியாவில் அதிக கரும்பு பயிரிடும் மாநிலம் உத்திரப் பிரதேசம். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் இங்கு 42% பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தியோரியா எனுமிடத்தில் பரதாப்பூர் சர்க்கரை ஆலைதான் முதன் முதலில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டு 1903.

இந்தியாவில் சர்க்கரை துறையின் ஆண்டு பரிவர்த்தனை 41,000 கோடி ரூபாய். இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் 2,500 கோடி ரூபாய் இந்தியாவில் 5 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகள் உள்ளனர்.

2014-15ம் ஆண்டில் இந்தியா 1.1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்துள்ளது.

SCROLL FOR NEXT