இத்தாலியின் பியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவு வெஸ்பா எலகன்டே 150 ஸ்கூட்டரில் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் பிரிவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டர் 150 சிசி திறன் கொண்டது.
ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் பீஜ் யுனிகோ மற்றும் பேர்ல் வொயிட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 11.6 பிஎஸ் திறன் 11.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையோடு வந்துள்ள இந்த ஸ்கூட்டரில் விசேஷ சேர்க்கையாக எலகன்டே பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. 12 அங்குல அலாய் சக்கரம் மற்றும் டியூப்லெஸ் டயர் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.
வண்டி வாங்குவோருக்கு வாகனத்தின் வண்ணத்துக்கேற்ற ஹெல்மட், ஸ்கூட்டரைச் சுற்றிலும் குரோம் கார்டு, முன்புற பம்பர் உள்ளிட்டவற்றையும் சேர்த்தே நிறுவனம் வழங்குகிறது.
வெஸ்பா ஸ்கூட்டர் பிரியர்களுக்காக இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டீலர்கள் மூலமாக விற்பனை செய்வதோடு ஆன்லைனில் பேடிஎம் மூலமாகவும் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை வாங்கலாம். ஆன்லைனில் வாங்குவோருக்கு பல கேஷ் பேக் ஆஃபர்களையும் அள்ளித் தருகிறது இந்நிறுவனம்.