1775 ஆம் ஆண்டு முதல் 1817 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜேன் ஆஸ்டின், பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில நாவலாசிரியர். ஆங்கில இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த இவரது நாவல்கள் காலத்தால் அழியாத காவியங்களாகப் போற்றப்படுகின்றன.
இவரது எழுத்துக்களில் உள்ள யதார்த்தம் மற்றும் சமூக விமர்சனம் போன்றவை இவருக்கு பெரும் மதிப்பினைப் பெற்றுத்தந்தன. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. இவைமட்டுமின்றி, உலகெங்கிலும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
வீட்டில் தங்கியிருப்பதைப் போன்ற உண்மையான சுகம் வேறு எங்கும் இல்லை.
இதயத்தின் மென்மைக்கு சமமான வசீகரம் வேறு எங்குமில்லை.
ஒரு கலைஞனால் அவலட்சணமான எதையும் செய்ய முடியாது.
திருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம்.
இந்த உலகின் ஒரு பாதியால் மற்ற பாதியின் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள முடிவதில்லை.
எங்கு ஒரு கருத்து பொதுவானதாக உள்ளதோ, வழக்கமாக அது சரியானதாகவே இருக்கின்றது.
செய்வதற்கு சரியான செயலை மிக விரைவாக செய்ய முடியாது.
நான் கேள்விப்பட்டவரையில் மிகப்பெரிய வருமானம் என்பது மகிழ்ச்சிக்கான சிறந்த செயல்முறையாக உள்ளது.
திறமையான நன்கு தகவலறிந்தவர்களின் சகவாசமே நல்ல சகவாசம் என்பதே என் கருத்து.
தற்பெருமை பலவீனமான தலைமையில் செயலாற்றி, ஒவ்வொரு வகையான குழப்பத்தையும் உருவாக்குகின்றது.
கடந்தகால நினைவுகூர்தல் உங்களுக்கு மகிழ்ச்சியளித்தால் மட்டும் அதைப்பற்றி நினையுங்கள்.
ஒருவருடைய வழிமுறை மற்றொருவருடையதைவிட சிறந்ததாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தனிப்பட்ட சிறந்ததை நாம் விரும்ப வேண்டும்.