1964 ஆம் ஆண்டு பிறந்த ஜாக் மா, புகழ்பெற்ற சீன தொழிலதிபர். அலிபாபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல்தலைவர் இவரே. சிறுவயதிலேயே ஆங்கிலம் கற்பதில் அதீத ஆர்வமுடையவராக இருந்தார். இதற்காகவே ஆங்கிலம் பேசுபவர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டார். புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றவர், ஆசியா மற்றும் உலக அளவில் செல்வந்தர் என பல பெருமைகள் இவருக்குண்டு.
சீன தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடியாகவும், இன்றைய உலகின் மிகச்சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.விட்டுவிடாதே. இன்று கடினமாக இருக்கிறது, நாளை மோசமாக இருக்கும், ஆனால் நாளை மறுநாள் பிரகாசமாக மாறும்.
# உங்கள் போட்டியாளரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் ஒருபோதும் காப்பியடிக்கக் கூடாது.
# நான் தொழில்நுட்பத்தில் சிறந்தவன் இல்லை. என்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் கண்களின் மூலமாக தொழில்நுட்பத்தை பார்க்கிறேன்.
# நீங்கள் கண்டிப்பாக கொண்டிருக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறுமையே.
# என்னை அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
# ஒரு சமாதான பேச்சு என்பது எப்போதுமே கடினமானது, எப்போதுமே சிக்கலானது.
# என்னுடைய வேலை பணம் சம்பாதிப்பது மற்றும் மற்றவர்கள் பணம் சம்பாதிக்க உதவுவது.
# நான் வேலை செய்வதற்காக இந்த உலகிற்கு வரவில்லை. என் வாழ்க்கையை அனுபவிக்கவே விரும்புகிறேன். என் அலுவலகத்தில் நான் இறக்க விரும்பவில்லை. கடற்கரையில் இறக்க விரும்புகிறேன்.
# வருமானங்களைப்பற்றி எனக்கு கவலை கிடையாது.
# பணம் சம்பாதிப்பதை விட பணத்தை செலவழிப்பது மிகவும் கடினம்.
# வர்த்தக யுத்தம் இந்த உலகத்திற்கான பேரழிவாக இருக்கும்.
# உங்களிடம் சரியான நபர்களை வைத்துக்கொள்ள வேண்டும், சிறந்தவர்களை அல்ல.
# நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்றால், ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வீர்கள்?
# நம்மிடம் பணம் இருக்கும்போது, நாம் தவறுகளை செய்ய ஆரம்பிக்கிறோம்.