வணிக வீதி

வெற்றி மொழி: ஜார்ஜ் சண்டயானா

செய்திப்பிரிவு

1863 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஜார்ஜ் சண்டயானா ஸ்பானிஷ் அமெரிக்க தத்துவவாதி, கட்டுரையாளர், கவிஞர் மற்றும் நாவலாசிரியர். மேலும், நயமான பாணியில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர். பல மொழிகளைக் கற்ற இவர், இலக்கியம், தத்துவம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆழமான அறிவைப் பெற்றிருந்தார். “தி சென்ஸ் ஆப் பியூட்டி” உள்ளிட்ட இவரது தத்துவப் படைப்புகள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் பெரும்புகழ் பெற்றவை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தத்துவவாதிகள் மத்தியில் தனிப்பட்ட இடம் இவருக்குண்டு.

> இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று குடும்பம்.

> மரணத்தால் மட்டுமே போரின் முடிவைப் பார்க்க முடியும்.

> ஒரு மனிதனின் பாதம் அவனது சொந்த நாட்டில் பதியப்பட வேண்டும். ஆனால், அவனது கண்கள் உலகையே நோட்டமிட வேண்டும்.

> உங்களுடைய உணர்வுபூர்வமான வாழ்க்கையை மற்றவர்களின் பலவீனங்களின் மீது ஒருபோதும் உருவாக்காதீர்கள்.

> மிகப்பெரும் ஏமாற்றங்களில் இருந்தே ஞானம் பிறக்கின்றது.

> விரைவில் கடந்த காலமாக மாறிவிடும் என்பதை நினைவுகூர்ந்து எதிர்காலத்தை வரவேற்க வேண்டும்.

> விவேகமுள்ள மனம் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் உள்ளது.

> கடினமானது என்பது உடனடியாக செய்ய முடிந்தது; சாத்தியமற்றது என்பது செய்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுவது.

> வாழ்க்கை என்பது ஒரு விந்தையோ அல்லது விருந்தோ அல்ல; அது ஒரு இக்கட்டான நிலையை உடையது.

> பள்ளியில் மட்டுமே படித்த ஒரு குழந்தை, உண்மையில் படிக்காத குழந்தையே.

> எது சாத்தியம் என்பதன் அறிவே மகிழ்ச்சியின் ஆரம்பம்.

> உடல் ஒரு கருவி, மனம் அதன் செயல்பாடு.

SCROLL FOR NEXT