கி.மு. 469 மற்றும் கி.மு. 399-க்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவராக அறியப்படும் சாக்ரடீஸ் கிரேக்கத்தைச் சேர்ந்த தத்துவஞானி.
இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவத்தின் முக்கிய நபர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். சிறுவனாக இருந்தபோதே கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இவரது கருத்துகள் மக்களைச் சிந்திக்க வைத்தன.
வாழ்வின் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் வாழ்க்கையைப்பற்றி அதிகமாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்தார். இவரது தத்துவங்கள் பிற்கால மேற்கத்திய தத்துவத்திற்கு சிறந்த அடித்தளமாக அமைந்திருந்தது. கிரேக்க தத்துவஞானி என்பதோடு, உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் போற்றப்படுகிறார்.
# மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள்.
# உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது.
# ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை மதிப்புமிக்க வாழ்க்கை அல்ல.
# நான் புத்திசாலி என்பது எனக்கு தெரியும், ஏனென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
# ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது.
# அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.
# மனநிறைவானது இயற்கையான செல்வம், ஆடம்பரமானது செயற்கையான வறுமை.
# நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதற்கு முயற்சிப்பதே ஒரு நல்ல நற்பெயரைப் பெறுவதற்கான வழி.
# சுறுசுறுப்பான வாழ்க்கையின் மலட்டுத்தன்மையில் எச்சரிக்கையாக இருங்கள்.
# என் அறியாமையின் உண்மையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது.
# என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது. என்னால் அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்.
# ஒரு நேர்மையான மனிதன் எப்போதும் ஒரு குழந்தை.
# ஞானம் ஆச்சரியத்தில் தொடங்குகிறது.