வணிக வீதி

நிசான் சன்னி ஸ்பெஷல் எடிசன் வெளியீடு

செய்திப்பிரிவு

நிசான் நிறுவனம்  தனது தயாரிப்புகளில் ஒன்றான சன்னி மாடலில் மேம்பட்ட மாடலை வெளியிட (ஸ்பெஷல் எடிஷன்) திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ. 8.48 லட்சமாகும். இது விசேஷமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். காரின் மேற்கூரை கறுப்பு வண்ணத்தில் இருக்கும்.

காரின் உள்புறத்தில் இருக்கைகளில் பிரீமியம் சீட் கவர் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 6.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் மிரரிங் வசதி ஆகியன உள்ளன.  இது நிசான் கனெக்ட் எனப்படும் புதிய வசதியைக் கொண்டது. இது புதிய கார் தொழில்நுட்பம் கொண்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஜியோ – பென்சிங், ஸ்பீட் அலெர்ட், கர்பியூ அலெர்ட், அருகிலுள்ள பெட்ரோல் நிரப்பு நிலையம் குறித்த தகவல், கார் இருக்குமிடம் அறிவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. சாவி தேவைப்படாத, புஷ் ஸ்டார்ட் பட்டன் கொண்டது. இதன் முன்புறத்தில் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. வேகமாக செல்லும்போது கார் கதவுகள் சரியாக மூடப்பட்டுள்ளனவா என்பதை உணர்த்தும் சென்சார், டிரைவர் சீட் பெல்ட் அறிவுறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அனைத்து மாடல்களிலும் உள்ளன.

99 ஹெச்பி, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 86 ஹெச்பி, 1.5 லிட்டர் கே9கே டீசல் இன்ஜின் உள்ளது. இரண்டு மாடலுமே 5 கியர்களை (மானுவல் டிரான்ஸ்மிஷன்) கொண்டது. ஃபியட் லீனியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வென்டோ, ஸ்கோடா ரேபிட் ஆகிய மாடல்களுக்கு இது சவாலாக இருக்கும்.

SCROLL FOR NEXT