வணிக வீதி

டியாகோ என்ஆர்ஜி அறிமுகம்

செய்திப்பிரிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மாடலில் மேம்பட்ட ரகமான டியாகோ என்ஆர்ஜி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மாடல் விலை ரூ. 5.50 லட்சத்திலும் டீசல் மாடல் விலை ரூ. 6.32 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிராஸ் ஹாட்ச் பேக் மாடலாகும்.

வழக்கமான டியாகோ மாடலை விட இது சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீ. ஆகும். இதன் நீளம், அகலம் அதிகமானது. இதன் முன்புறத்தில் கருப்பு கிரில் உள்ளது. அதேபோல மேற்கூரையில் ரூஃப் ரெயில்ஸ் உள்ளது. கருப்பு நிறத்திலான விங் மிரர் மற்றும் கருப்பு கைப்பிடி ஆகியன மிகவும் அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

உள்புறத்தில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விங் மிரர் வசதி உள்ளது. இதில் 5 அங்குல தொடு திரை மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கிறது. ரிவர்ஸ் எடுக்கும்போது திரையில் காரின் பின் பகுதி தெரியும். இதில் நான்கு ஸ்பீக்கர்கள் இனிமையான இசையை அனைவருக்கும் அளிக்கும்.

தொழில்நுட்ப ரீதியில் டியாகோ மாடலில் உள்ள அதே இன்ஜின்தான் என்ஆர்ஜி மாடலிலும் உள்ளது. இதில் கியர் பாக்ஸ் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மானுவல் டிரான்ஸ்மிஷன் கியர் சிஸ்டத்தைக் கொண்டது. டியாகோ மாடலில் ஏஎம்டி வசதி உண்டு.

SCROLL FOR NEXT