1812-ம் ஆண்டு முதல் 1870-ம் ஆண்டு வரை வாழ்ந்த சார்லஸ் டிக்கன்ஸ் ஆங்கில நாவலாசிரியர் மற்றும் சமூக விமர்சகர். விக்டோரியா காலத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக பரவலாக அறியப்படுபவர்.
சமூக அநீதி, துரோகம், வறுமை, காதல் போன்ற அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளையே தனது நாவல்களிலும் பிரதிபலித்தவர். இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு மற்றும் ஆலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் மிகவும் பிரபலமான கதா
பாத்திரங்களை தனது படைப்புகளின் வாயிலாக உருவாக்கியவர். இவரது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் இன்றும் பரவலாக வாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
# இயற்கை ஒவ்வொரு காலத்துக்கும் மற்றும் ஒவ்வொரு பருவத்துக்கும் தனிப்பட்ட சில அழகுகளைக் கொடுக்கிறது.
# சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொள்ளும் மனிதர்கள், உலகம் முழுவதையும் சகோதரத்துவத்துடனேயே அழைக்கிறார்கள்.
# மூளைக்கு என்று ஒரு ஞானமும் இதயத்திற்கு என்று ஒரு ஞானமும் இருக்கிறது.
# மற்றவர்களுக்காக வீணடிக்கப்பட்ட ஒரு நாள், ஒருவருக்கு வீணடிக்கப்படாத நாளே.
# ஒரு அன்பான இதயமே உண்மையான ஞானம்.
# மோசமான மனிதர்கள் இல்லை என்றால், நல்ல வழக்கறிஞர்கள் இருக்க மாட்டார்கள்.
# கருணை வீட்டில் தொடங்குகிறது, நீதி அடுத்த வீட்டிலிருந்து தொடங்குகிறது.
# நீங்கள் உங்கள்
இதயத்தை யாருக்காக திறந்தீர்களோ, அவர்களுக்கு உங்கள் உதடுகளை மூடிவிடாதீர்கள்.
# மற்ற அனைத்து போதனைகளையும் விட துன்பம் வலுவானதாக உள்ளது.
# மற்றவருடைய பாரத்தை சுமக்கும் எவரும் இந்த உலகில் பயனற்றவர் அல்ல.
# என் ஆலோசனை என்னவென்றால், இன்று உங்களால் செய்ய முடிந்த ஒன்றை ஒருபோதும் நாளை செய்யாதீர்கள் என்பதே.
# சிலர் யாருடைய எதிரிகளாகவும் இல்லை, ஆனால் அவர்களின் சொந்த எதிரிகளாக இருக்கிறார்கள்.