1984-ம் ஆண்டு பிறந்த மேரி கொண்டோ ஜப்பானிய தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் ஆவார். வாழ்க்கைமுறை கோட்பாடுகளுக்காக பிரபலமானவராக அறியப்படுபவர். மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனையாகும் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலம், கொரியன், சைனீஸ், பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. சொற்பொழிவுகள், வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 2015-ம் ஆண்டு டைம்ஸின் மிகவும் செல்வாக்குமிக்க நூறு நபர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
# நாம் செய்யாதவற்றை அகற்றுவதே நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதை கண்டறிய சிறந்த வழி.
# நீங்கள் உங்கள் வீட்டை ஒழுங்காக வைத்துக்கொண்ட பிறகே வாழ்க்கை உண்மையிலேயே தொடங்குகிறது.
# ஒரு குறிப்பிட்ட புத்தகத்துக்காக நீங்கள் முதலில் எடுத்துக்கொண்ட நேரமே அதை வாசிப்பதற்கான சரியான நேரமாகும்.
# உங்கள் இதயத்தில் பேசும் விஷயங்களை மட்டும் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
# சிந்திக்கும் முறையை முதலில் மாற்றாமல் மக்களால் தங்களது பழக்கவழக்கங்களை மாற்ற முடியாது.
# உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு வாழ விரும்புகிறீர்கள் என்ற கேள்வியே, உண்மையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதற்கான கேள்வியாகும்.
# தூய்மைப்படுத்துதலின் நோக்கம் வெறுமனே சுத்தப்படுத்துதல் அல்ல, அந்தச் சூழலில் வாழும் மகிழ்ச்சியை உணர வேண்டும்.
# நாம் எதை வைத்துக்கொள்ள விரும்புகிறோமோ அதையே தேர்வு செய்யவேண்டும், விட்டொழிக்க வேண்டியதை அல்ல.
# உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் விஷயங்களை உண்மையாகவே போற்றுதல் வேண்டும்.
# மகிழ்ச்சியை தூண்டாத எதையும் உங்களிடமிருந்து அகற்றிவிடுங்கள்.
# உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்ற விஷயங்களில் உங்களது நேரத்தையும் ஆர்வத் தையும் கொட்டுங்கள்.
# வெற்றி என்பது 90 சதவீதம் நமது மனநிலையைச் சார்ந்தது.
# எனக்கு என்ன பொருந்துமோ அதை மட்டுமே நான் வாங்குவேன்.