வணிக வீதி

இந்திய சாலைகளுக்கேற்ற பிஎம்டபிள்யூ

செய்திப்பிரிவு

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சாலைகளுக்கேற்ற புதிய ரக மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தப் புதிய மாடல் இஸட் 4 என்ற பெயரில் அறிமுகமாகிறது. இதில் ஒரு மாடல் 197 ஹெச்பி திறன் மற்றும் 2 லிட்டர் – நான்கு சிலிண்டர் இன்ஜினும் மற்றொன்று 340 ஹெச்பி திறன் 3 லிட்டர், 6 சிலிண்டர் இன்ஜினும் கொண்டதாக வந்துள்ளன.

இரண்டு மாடலுமே 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டவை. இவை இரண்டுமே மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியவை. 100 கி.மீ. வேகத்தை இவை 4.5 விநாடிகளில் எட்டிவிடும் என்பது சிறப்பாகும்.பிஎம்டபிள்யூ இஸட் 4 மாடல் காரில் போதிய வெளிச்சம் நிலவுகிறது.

இதில் உள்ள ஹார்மன் பிராண்டின் 12 ஸ்பீக்கர்கள் இனிய இசை வெள்ளத்தை காரில் ஒலிக்கச் செய்யும். தானாக பார்க் செய்யும் வசதி, ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை இதன் சிறப்பாகும்.

கேமிரா மற்றும் ரேடார் அடிப்படையிலான டிரைவர் அசிஸ்ட் பின்புறம் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலையும் உணர்த்தும். தானாக பிரேக் போடும் வசதி, லேன் மாறுவதை அறிவுறுத்தும் கருவி, பின்புறம் வாகனம் இடிக்கப்போவதை உணர்த்தும் கருவி ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

இதன் விலை ரூ. 85 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT