கியா மோட்டார்ஸின் வருகையை இந்திய ஆட்டோமொபைல் சந்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தனது முதல் எஸ்யுவியை கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சியோல் மோட்டார் கண்காட்சியில் சிக்னேச்சர் எஸ்பி2ஐ என்ற எஸ்யுவி கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்திக்குத் தயாராக உள்ள இந்த எஸ்பி சிக்னேச்சர் அட்டகாசமான வடிவமைப்பு கொண்ட காம்பேக்ட் எஸ்யுவியாக உள்ளது. புலியின் மூக்கு போன்ற இதன் கிரில் வடிவமைப்பும், அதற்கேற்ப பொருத்தப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் இதற்குத் தனி கம்பீரம் தருகிறது. இதன் கான்ட்ராஸ்ட் ரூஃப், மெஷ் பினிஷ் செய்யப்பட்ட ஏர் டேம், ஸ்லிம்மான எல்இடி ஃபாக் லைட் ஆகியவைக் கண்ணை கவரும் வகையில் உள்ளன.
இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இவை இரண்டுமே பிஎஸ் 6 தர முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ்களைக் கொண்டதாக இருக்கும். விலை உள்ளிட்ட மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.