வணிக வீதி

செல்லப் பிராணிகளுக்கு ‘கிப்பி டிராக்கர்’

செய்திப்பிரிவு

மனிதர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கண்காணிக்க டிராக்கரைப் பயன்படுத்தும் காலத்தில் செல்லப் பிராணிகளைக் கண்காணிக்க டிராக்கர் வசதி வேண்டாமா? அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது கிப்பி டிராக்கர். வோடபோன் நிறுவனத்தின் தயாரிப்பு இது.

செல்லப் பிராணிகளைச் சரியாகப் பராமரிக்க, அவற்றுக்குத் தேவையான நேரத்தில் தேவையானதைச் செய்ய, அது எங்கே செல்கிறது, என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள என அனைத்தையும் இருந்த இடத்திலிருந்தே உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

இந்தச் சாதனம் ஜிபிஎஸ் வசதியுடன் கூடியது. செல்லப் பிராணி எவ்வளவு உணவு உட்கொள்கிறது என்பதுவரை இது கண்டுபிடித்துவிடும். இந்த சாதனத்தை அதற்கான செயலி மூலமாக நம்முடைய ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT