வணிக வீதி

வெற்றி மொழி: ஜே. கே. ரௌலிங்

செய்திப்பிரிவு

1965-ம் ஆண்டு பிறந்த ஜே. கே. ரௌலிங் பிரிட்டிஷ் நாவலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், கொடையாளர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். சிறு வயதிலேயே கற்பனைக் கதைகள் எழுதுவதில் ஈடுபாடு உடையவராக விளங்கினார். ஹாரி பாட்டர் என்னும் மிகச்சிறந்த கற்பனைத் தொடருக்காக பெரிதும் அறியப்படுபவர்.

இந்தப் புத்தகங்கள் பல மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனையானதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. மேலும், ஹாரி பாட்டர் கதை திரைப்படமாக வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. ஹார்வர்ட் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களின் கவுரவப் பட்டங்களையும், பதக்கங்களையும் இவர் பெற்றுள்ளார்.

# அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு ஆகியன பெரும்பாலும் வெளிப்படையான வெறுப்பினை விட மிகவும் அதிகப்படியான சேதத்தை உருவாக்குகின்றன.

# ஏதாவது சிலவற்றில் தோல்வி அடையாமல் வாழ்வது என்பது சாத்தியமற்றது.

# நீங்கள் இறக்கும் வரையிலும் உழைத்துக்கொண்டும் கற்றுக்கொண்டும் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

# உண்மையிலேயே நாம் யார் என்பதை நமது திறமைகளை விட அதிகமாக, நமது தேர்வுகளே காட்டுகின்றன.

# நீங்கள் படிக்க விரும்பவில்லை என்றால், சரியான புத்தகத்தை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று அர்த்தம்.

# போதுமான மனோதிடத்தை நீங்கள் பெற்றுவிட்டால் எதுவும் சாத்தியமான ஒன்றே.

# புரிந்துகொள்வதே ஏற்றுக் கொள்வதற்கான முதல் படியாகும்.

# என்ன நடக்குமோ அது நடந்தே தீரும், அப்படி நடக்கும்போது நாம் அதை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

# மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிக்க வேண்டும்.

# மரணம் என்பது வாழ்க்கையின் அடுத்த பெரிய சாகசமாகும்.

# இன்டர்நெட் என்பது இளைஞர்களுக்கு ஒரு வரமாகவும் சாபமாகவும் உள்ளது.

SCROLL FOR NEXT