1724-ம் ஆண்டு முதல் 1804-ம் ஆண்டு வரை வாழ்ந்த இம்மானுவேல் கான்ட் ஜெர்மன் தத்துவவாதி. தற்கால தத்துவவியலின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுபவர் இவர். சிறுவயதிலேயே கல்வியின் மீது ஈடுபாடு கொண்டவராக விளங்கியதோடு, தத்துவங்களையும் கற்றவர். தத்துவங்கள் மட்டுமின்றி நெறிமுறைகள், மதம், சட்டம், அழகியல், வானியல் மற்றும் வரலாறு போன்றவற்றை பற்றிய பல முக்கிய படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். மேற்கத்திய சிந்தனைகளின் மீது மிக ஆழமான செல்வாக்கு செலுத்திய இம்மானுவேல் கான்ட் அனைத்து காலத்திற்குமான மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
# நமது அனைத்து அறிவாற்றலும் அனுபவத்திலேயே தொடங்குகிறது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று.
# ஒரு மனிதன் விலங்குகளை கையாளுவதை வைத்து நம்மால் அவனது இதயத்தை மதிப்பிட முடியும்.
# குருட்டு வாய்ப்பின் மூலமாக எதுவும் நடந்துவிடாது.
# ஒரு மனிதன் தன்னை ஒரு புழுவாக ஆக்கிக் கொண்டால், அவன் மிதிபடும் சமயங்களில் புகார் செய்யக்கூடாது.
# கருத்துகள் இல்லாத உள்ளுணர்வுகள் குருட்டுத் தனமானவை.
# அனைத்து நல்ல புத்தகங்களையும் படிப்பது என்பது கடந்த நூற்றாண்டுகளின் சிறந்த மனங்களுடனான ஒரு உரையாடலாகும்.
# மற்றவர்களின் உரிமைகளை மீறுகையில் சட்டத்தின்படி ஒருவன் குற்றவாளி. அவன் தவறை அவனே உணர்ந்தால் நெறிமுறைகளின்படி அவன் குற்றவாளி.
# சிந்தனை செய்வதற்கான மன ஊக்கத்தைக் கொண்டிருங்கள்.
# மகிழ்ச்சிக்கான விதி: எதையாவது செய்யுங்கள், யாரையாவது நேசியுங்கள், எதையாவது நம்புங்கள்.
# மனிதனாக மாறுவதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்வதே மனித னின் மிகச்சிறந்த தேடலாகும்.
# உங்களுடைய சொந்த அறிவுத்திறனை பயன்படுத்துவதற்கான தைரியத்தை பெற்றிருக்க வேண்டும்.