வணிக வீதி

வெற்றி மொழி: பில் கேட்ஸ்

செய்திப்பிரிவு

1955-ம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர், எழுத்தாளர், கொடையாளர் மற்றும் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் முதன்மை நிறுவனர். தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை மென்பொருள் வல்லுநர் போன்ற பதவிகளை மைக்ரோசாப்டில் வகித்துள்ளார்.

தனது சிறுவயதிலேயே கணினியில் பெரிதும் ஈடுபாடு உடையவராக விளங்கினார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தைப் பெற்றவர். கணினி துறையில் பெரும் புரட்சியை உருவாக்கி, உலக மக்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சாதனையாளர்.

# வெற்றியைக் கொண்டாடுவது நல்லது, ஆனால் தோல்வியின் படிப்பினைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

# உங்களின் மிகவும் மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களே, கற்றுக்கொள்வதற்கான உங்களின் மிக உயரிய ஆதாரம்.

# தொழில்நுட்பம் என்பது வெறும் கருவி மட்டுமே.

# தடுத்தல் இல்லாத சிகிச்சை என்பது வெறுமனே நிலையற்றது.

# தகவல் தொழில்நுட்பமும் வணிகமும் தவிர்க்கமுடியாத பிணைப்புடன் இணைந்து வருகின்றன.

# கலைத்திறன் மற்றும் பொறியியல் இடையேயான ஒரு சிறந்த கலவையே மென்பொருள்.

# நம்மீதான கருத்துகளை தெரிவிக்கக்கூடிய நபர்கள் நம் அனைவருக்கும் தேவை. அதுவே நாம் எப்படி முன்னேறுகிறோம் என்பதாகும்.

# உங்களால் அதை நன்றாக செய்யமுடியாது என்றால், குறைந்தபட்சம் அதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்படி செய்யுங்கள்.

# இணையதளமே விளம்பரத்தின் எதிர்காலம்.

# நீங்கள் ஏழையாக பிறந்திருந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு.

# அறிவைப் பெற்றிருப்பதனால் ஆற்றல் வருவதில்லை, அறிவைப் பகிர்ந்து கொள்வதாலேயே வருகிறது.

# வணிகம் என்பது சில விதிமுறைகளும் நிறைய ஆபத்துகளும் கொண்ட பண விளையாட்டு.

SCROLL FOR NEXT