வணிக வீதி

வெற்றி மொழி: சி. எஸ். லூயிஸ்

செய்திப்பிரிவு

1898-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை வாழ்ந்த சி.எஸ்.லூயிஸ் ஆங்கில எழுத்தாளர் மற்றும் இறையியல் நிபுணர்.   லட்சக் கணக்கான பிரதிகள் விற்பனையான முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவரது எழுத்துகள் மேடை நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சினிமா வாயிலாகவும் பிரபலமடைந்தவை. இவரது மரணத்திற்குப் பிறகும், இவருடைய புத்தகங்கள் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வந்தன. அனைத்து காலத்திற்குமான சிறந்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

# வெறுக்கத்தக்க வார்த்தைகள் உங்கள் உணர்வுகளை காயப்படுத்தலாம், ஆனால் அமைதி உங்கள் இதயத்தை உடைக்கிறது.

# நீங்கள் என்ன பார்க்கிறீர்கள், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

# தோல்வியடையும் ஒருவர் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்கிறார்.

# நாம் யாரென்று நாம் நம்புகிறோமோ அதுவாகவே நாம் இருக்கிறோம்.

# நவீன கல்வியாளர்களின் பணி காடுகளை அழிப்பதல்ல, பாலைவனங்களில் பாசனம் செய்வது.

# உண்மையில், அற்புதங்கள் இயற்கையின் விதிகளை உடைக்கவில்லை.

# நம் வாழ்க்கையில் எந்த சாதாரண மக்களையும் நாம் சந்திப்பதில்லை.

# வெறும் கருணையைக் காட்டிலும் அன்பு மிகவும் உறுதியானது மற்றும் அற்புதமானது.

# மகிழ்ச்சி என்பது சொர்க்கத்தின் தீவிர வியாபாரமாகும்.

# சாப்பிடுவதும் வாசிப்பதும் பிரமிக்கத்தக்க வகையில் இணைந்த இரண்டு மகிழ்ச்சிகள்.

# நான் இப்போது உணர்கின்ற வலி என்பது, எனக்கு முன்பு கிடைத்த மகிழ்ச்சி.

# நாம் பின்வாங்குவதைவிட சிறந்த, மிகச்சிறந்த விஷயங்கள் நம்முன்னே உள்ளன.

SCROLL FOR NEXT