வணிக வீதி

கோரப்படாத முதலீடுகளைப் பெறுவது எப்படி?

ஆர்த்தி கிருஷ்ணன்

பல்வேறு காரணங்களால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கோரப்படாமல் முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்கின்றன. இப்படி கோரப்படாத தொகையின் மதிப்பு அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்றாலும், தோராயமாக சில ஆயிரம் கோடிகள் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

முதலீட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் முதலீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், தேடி வந்து முதலீடுகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு எந்த அவசியமுமில்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்களின் பெயரில் ஏதேனும் கோரப்படாத முதலீடு கள் இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

முதலீட்டாளர் ஒருவர் தன்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு விவரங் களைத் தெரிவிக்காமல் மரணமடைந்து விடுவதால் மட்டுமே அந்த முதலீடு கோரப்படாமல் இருப்பதில்லை. வேறு சில காரணங்களாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கோரப்படாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன.

2006க்கு முன்பு மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்தவர்கள், தங்களின் இமெயில், பான் எண் உள்ளிட்ட கேஒய்சி விவரங்களை புதுப்பிக்கத் தவறியிருக்கலாம். அல்லது முதலீடு காகித வடிவில் இருக்கிறதென்றால், வங்கிக் கணக்கு மாறியிருக்கலாம், முதலீடு செய்த பிறகு முகவரி, இமெயில் உள்ளிட்டவை மாறி யிருக்கலாம். அல்லது உங்களுடைய வங்கி விவரங்களும், நீங்கள் முதலீட்டு நிறுவனத்தில் கொடுத்துள்ள விவரங்களும் பொருந்தாமல் இருந்தாலும் டிவி டெண்ட் பெறுவதிலும், முதலீட்டை மீட்பதி லும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.

கோரப்படாத முதலீடுகளை மியூச் சுவல் ஃபண்டுகள் எப்படி கையாள வேண்டுமென்று தெளிவான விதிமுறை களை செபி வகுத்துள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கோரப் படாத தொகையை தனி லிக்விட் ஃபண் டில் முதலீடு செய்து, அவற்றின் மீது நிர்வாகக் கட்டணம் என 0.50 சதவீதம் வசூலிக்கும். மேலும் ஒவ்வொரு முத லீட்டாளர் பெயரிலும் உள்ள கோரப்படாத தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது இணையதளத்தில் முதலீட் டாளர்கள் பார்க்கும் வகையில் பதிவேற்ற வேண்டும்.

இதற்கான 40க்கும் மேலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இணைய பக்கங்களின் லிங்க் ஆம்ஃபி இணையதளத்திலேயே உள்ளது.

இந்த இணையதளங்களில் பெயர், பான் எண், ஃபோலியோ எண், பிறந்த தேதி, வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை தந்து கோரப்படாத தொகையை நம்மால் பார்க்க முடியும்.

ஆனால் பெரும்பாலான முதலீட்டாளர் கள் பல முதலீடுகள் வைத்திருக்கலாம் என்பதால் எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பார்க்க வேண்டும் என் பது தெரியாது, எல்லா ஃபண்ட் நிறுவனங்களின் இணைய பக்கங்களையும் பார்த்து கண்டுபிடிப்பதும் கடினமான காரியம். எனவே இதற்கு சிறந்த வழி கேம்ஸ் (CAMS), கார்வி ஆகிய பதிவாளர்கள் மூலமாக பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள கோரப்படாத தொகையைப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த இரண்டு பதிவாளர்களும் பல்வேறு ஃபண்டுகளில் உள்ள கோரப்படாத அல்லது மீட்கப்படாத முதலீடுகளை, பான் எண், ஃபோலியோ எண், வங்கிக் கணக்கு, இமெயில், மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொடுப்பதன் மூலம் பார்த்துக்கொள்ள அனுமதிக்கின்றன.

கோரப்படாத தொகையைக் கண்டறிந்த பிறகு, இந்தப் பதிவாளரிடமோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் திடமோ அதற்கு தேவையான ஆவணங் களைச் சமர்பித்து, தொகையை மீட்க விண்ணப்பிக்கலாம். தவணை தேதியி லிருந்து மூன்று வருடத்துக்குள் கிளெய்ம் செய்தால், கோரப்படாத தொகை, அது ஈட் டிய வருமானத்துடன் கிடைக்கும். மூன்று வருடம் கடந்துவிட்டால், மூன்றாவது வருட இறுதியில் உங்களுடைய முதலீடு என்ன மதிப்போ அது மட்டுமே கிடைக் கும். மூன்று வருடத்துக்குப் பிறகு அது ஈட்டிய வருமானம் தரப்பட மாட்டாது.

ஆனால், இந்த நடைமுறை கோரப் படாமல் இருக்கும் டிவிடெண்ட் அல் லது ஃபண்டுகளை மீட்பதற்குதான். ஒரு வேளை முதலீட்டாளர் இறந்துவிட்டால் இந்த நடைமுறையின் மூலம் திரும்பப் பெற முடியாது. அதேபோல் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டாலும், சரியான வங்கி விவரங் கள் தராவிட்டாலும், அல்லது மறந்து விட்டாலும் கூட பெற முடியாது.

ஏனெனில், ஓப்பன் எண்டட் ஃபண்டு களில் குரோத் ஆப்ஷனில் உங்கள் முதலீடு இருந்தால் அந்தத் தொகை கோரப்படாத தொகையாகக் கருதப்பட மாட்டாது. அது அல்ட்ரா லாங் டேர்ம் முதலீடாகவே கருதப்படும்.

இந்த மாதிரியான முதலீடுகளைக் கண் டறிவதும், திரும்பப் பெறுவதும் கடின மான காரியம். உங்களுடைய மறைந்த உறவினர் ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளார் என்றாலோ, அல்லது உங்களுடைய முதலீட்டை மறந்துவிட்டிருந்தாலோ நீங்கள் CAMS இணையதளத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையை கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கும் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி அவசியம். ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையிலிருந்து தனிப்பட்ட முதலீடுகளைப் பற்றி பார்க்க முடியும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளி லிருந்து முதலீடுகளை மீட்பது என்பதைப் பொருத்தவரை முன்கூட்டியே காத்துக் கொள்வதுதான் எளிதான வழி. எனவே ஒவ்வொரு வாரமும் சில நிமிடங்கள் செலவு செய்து உங்களுடைய இமெயிலை பாருங்கள், கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுங்கள், செய்த முதலீடுகளின் நகல்களை ஆவணப்படுத்துங்கள்.

நன்றாக இருக்கும்போதே நம்முடைய முதலீடு களின் கேஒய்சி விவரங்களையும், நாமினி விவரங்களையும் தெளிவாக அப்டேட் செய்வது அவசியம். மேலும் முதலீட்டு விவரங்களை நெருங்கியவரிடம் தெரிவிப்பதும் அவசியம்.

- aarati.k@thehindu.co.in

SCROLL FOR NEXT