1929-ம் ஆண்டு பிறந்த உர்சுலா கே லே கின் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர். குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறுகதைகள், கவிதை மற்றும் கட்டுரைகள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். பெரும்பாலும் கற்பனை மற்றும் அறிவியல் கற்பனை வகைகளை தனது படைப்புகளில் கொண்
டிருந்தார். இவரது ஆக்கங்கள் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். உயர்ந்த தரத்திலும் பல்வேறு வடிவங்களிலும் தங்களது படைப்புகளைக் கொடுத்துள்ள சில அமெரிக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுகிறார்.
# விளக்கின் வெளிச்சத்தை பார்க்க வேண்டுமானால், அதனை இருட்டான இடத்தினுள் எடுத்துச்செல்ல வேண்டும்.
# எனது கற்பனையே என்னை மனிதனாகவும் மற்றும் முட்டாளாகவும் ஆக்குகிறது.
# நீங்கள் அலாரம் வைத்தாலும் அல்லது வைக்கா விட்டாலும் காலை என்பது வந்தேதீரும்.
# கேட்க வேண்டுமானால், அமைதியாக இருக்க வேண்டும்.
# மாற்றமே சுதந்திரம், மாற்றமே வாழ்க்கை.
# நீங்கள் திறக்கும் வரை, ஒரு புத்தகம் என்பது வார்த்தைகள் அடங்கிய ஒரு பெட்டி போன்றது.
# தவறான கேள்விகளுக்கு சரியான பதில்கள் என்பது கிடையாது.
# நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது, ஒரு நிழலையும் உருவாக்குகிறீர்கள்.
# பயமும் நெருப்பும் நல்ல வேலைக்காரர்கள், ஆனால் மோசமான எஜமானர்கள்.
# நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ளக்கூடிய கேள்விகள் மட்டுமே, உண்மையில் முக்கியமான கேள்விகள்.
# படிக்கப்படாத கதை ஒரு கதையே அல்ல.
# ஒரு கதையானது களத்தில் இல்லை, அது சொல்லப்படுகின்ற விதத்தில் இருக்கிறது.