யமஹா மோட்டார் நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் பேசல் 4 விதிகளைக் கொண்ட ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இது முற்றிலும் புதிய வடிவமைப்பாக இருக்கும். இந்தியாவில் பாரத் 4 விதிகள் கிட்டத்தட்ட யூரோ 5 விதிகளுக்கு இணையானதாக இருக்கும்.
இந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தையில் யமஹா பெரும் போட்டிகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 4 சதவீதம் மட்டுமே கூடுதலாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரத்தில் ஸ்கூட்டர் சந்தை வளர்ச்சி இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஸ்கூட்டர் பிரிவில் புதிய முயற்சிகளில் யமஹா இறங்கியுள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இந்த நிறுவனம் 2.5 கோடி இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் கடுமையாக போட்டி அளித்து வருகின்றன.மூன்றில் இருபங்கு சந்தையை இந்த நிறுவனங்கள் வைத்துள்ளன. இதற்கிடையே டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு, சுஸூகி மோட்டார் நிறுவனங்களும் இருசக்கர வாகன சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளன.
இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான சந்தை பிரிந்து கொண்டிருந்தாலும்,ஹோண்டா, டிவிஎஸ் போல யமஹாவின் ஸ்கூட்டர்கள் குறிப்பிட்ட அளவு சந்தையை பிடிக்கவில்லை. இந்த நிறுவனத்தின் பேசினோ மாடலுக்கு என்று சந்தை இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு சரியாக சென்றடையவில்லை.
இதனால் யமஹா நிறுவனம் புதிய உத்திகளுடன் சந்தையில் இறங்குகிறது. குறிப்பாக அடுத்த 18 மாதங்களில் பிஎஸ் 4 விதிகளை கொண்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கவும் யமஹாவிடம் திட்டம் உள்ளது.
ஆனால் இப்போதைக்கு இல்லை என்று அந்த கதவினை அடைத்துவிட்டது. கடந்த நில ஆண்டுகளில் யமஹா நிறுவனம் ஆப்பிரிக்க சந்தைகளில் கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் யமஹாவில் புதிய பேசல் 4 விதிகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் உலக சந்தைகளில் வலம் வரும் என்றே நம்பலாம்.