நிசான் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்தேயகமாக தயாரிக்கும் தனது காரின் வெளிப்புற வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. நிசான் "கிக்ஸ்"’ என்ற பெயரிலான எஸ்யுவி மாடலான இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.
சர்வதேச அளவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மாடல்களைக் காட்டிலும் இந்திய மாடல் கார் அளவில் பெரியதாக இருக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது. இதன் நீளம் 4.4 மீட்டராக இருக்கும். சர்வதேச அளவில் பிற நாடுகளில் விற்பனையாகும் இந்த மாடல் காரின் நீளம் 4.3 மீட்டராகும். உயரம் சற்று கூடுதலாகவும், சக்கரங்களின் அளவு பெரியதாகவும் இருக்கும். உள் பகுதியில் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.
டேஷ் போர்டில் 8 அங்குல தொடு திரை இருக்கும். ஆப்பிள் கார் பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியன இதன் வழக்கமான சேர்க்கைகளாக இதில் இடம்பெறும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் மோட்டார், 106 ஹெச்பி மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகியன இதிலும் இருக்கும். டீசல் என்ஜினில் 6 கியர்களும் பெட்ரோல் மாடலுக்கு 5 கியர்களும் இருக்கும். இதன் விலை ரூ. 15 லட்சம் வரை இருக்குமாம்.