வணிக வீதி

டிவிஎஸ் `ஸ்டார் சிட்டி பிளஸ் அறிமுகம்

செய்திப்பிரிவு

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி மோட்டார் சைக்கிளின் மேம்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்டார் சிட்டி பிளஸ் என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் விற்பனையக விலை ரூ. 52,907.

இரட்டை நிறங்களில் பார்ப்பதற்கே அழகாக காட்சி தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்பு – சிவப்பு, கறுப்பு – நீலம், சிவப்பு – கறுப்பு ஆகிய நிறக் கலவைகளிலும் இது கிடைக்கும்.

இந்த மோட்டார் சைக்கிள் 110 சிசி திறன் கொண்டது.

இதில் முதல் முறையாக எஸ்பிடி எனப்படும் ஒருங்கிணைந்த பிரேக் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரேக் பிடிக்கும்போது முன்புற மற்றும் பின்புற சக்கரங்கள் ஒரே சமயத்தில் நிற்கும். இதனால் வாகனம் ஸ்கிட் ஆவது தவிர்க்கப்படும். இரண்டு சக்கரங்களிலுமே டிரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

110 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில்  எஸ்பிடி வசதியை அளிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் பெற்றுள்ளது. இன்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. ஒற்றை சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் இன்ஜின் ஆகியவற்றுடன் இது வந்துள்ளது. நான்கு கியர்களைக் கொண்டது. 17 அங்குல 5 ஸ்போக்ஸ் அலாய் சக்கரத்தைக் கொண்டதாக இது வந்துள்ளது.

SCROLL FOR NEXT