உயிர் மூச்சு

அலட்டிக்கொள்ளாத அண்டைவீட்டார்: கோபி கலைஞருக்கு முதல் பரிசு

தீபக்

ஈரோடு மாவட்டம் எலத்தூர் நாகமலை குன்று உயிர்ப்பன்மை மரபுத் தலத்தில், வேட்டையாடும் உயிரினமான ராசாளிக் கழுகும் (Bonelli’s Eagle), அதற்கு இரையாகக்கூடிய அணிலும் அருகருகே அமர்ந்திருக்கும் அரிய காட்சி.

தேசியக் காட்டுயிர் வாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத் துறை, டிரெக் தமிழ்நாடு இணைந்து மாநில அளவிலான வாழிடம் சார்ந்த ஒளிப்படப் போட்டியை அக்டோபர் மாதம் நடத்தின. இதில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த டி.மகேஷ்வரன் எடுத்த இந்த ஒளிப்படம் முதல் பரிசைப் பெற்றது. இந்தப் படத்துக்கு மகேஷ்வரன் கொடுத்திருந்த தலைப்பு ‘Unbothered neighbours' (அலட்டிக்கொள்ளாத அண்டைவீட்டார்).

இரைக்கொல்லிகளும் அவற்றுக்கு இரையாகுபவையும் அருகருகே இருப்பது சாத்தியம்தான் என்றாலும், அதை ஒளிப்படமாகப் பதிவுசெய்வது கடினம். ராசாளிக் கழுகு முதன்மை வேட்டையாடும் உயிரினம். அருகிலுள்ள மூன்றுவரி அணில் சிறிய உருவத்தைக் கொண்டிருப்பதால் சட்டென்று கண்ணுக்குப் புலப்படாது. வேட்டையாடிப் பறவையை அந்த அணில் எந்த அச்சமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மகேஸ்வரன்

அதிகாலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இது. ராசாளிக் கழுகு நகர்ப்புறத்துக்கு அருகே காணப்படுவது அரிது. எலத்தூர் நாகமலையில் ஒரு ஜோடி ராசாளிக் கழுகுகள் உள்ளன. - தீபக்

SCROLL FOR NEXT