ஜீன்ஸ் அணிபவர்கள் சூழலுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால், உங்களுக்கு கோபம் வரலாம். ஆனால் கோபப்படுவதற்கு முன் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதன் பின்னுள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அணியும் நீல நிற ஜீன்ஸின் உருவாக்கத்தில், அதன் இறுதிக்கட்டப் பணிகளுக்காக மட்டுமே சுமார் 45 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
நூற்றுக்கணக்கான மக்களின் ஒரு வருடக் குடிநீர் தேவைக்குச் சமமான அளவு இது. தவிர, இதில் பயன்படுத்தப்படும் தார்ச் சாயம், நச்சு வேதிப்பொருட்கள் காரணமாக, ஜீன்ஸ் விரைவில் மக்கிப் போகவும் செய்யாது. நல்ல ‘ஷேடு' கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த உடை சூரிய விளக்குகளின் கீழ் வைத்துச் சில காலத்துக்குப் பராமரிக்கப்படுகிறது. அதில் வீணாகும் சூரிய எரிசக்தியின் அளவு அதிகம். அடுத்தமுறை நாலு ஜீன்ஸ் வாங்குவதற்கு முன்னால், இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கலாமே!