இந்த உலகில் மிகவும் அதீதமான சூழலில்கூட உயிர் வாழும் உயிரினம் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ‘நீர்க் கரடிகள்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட டார்டிகிரேட்ஸ் என்ற சின்னஞ்சிறிய சிற்றுயிர் இது. சுமார் 30 ஆண்டுகளாகக் கடும் குளிரில் உறைந்துபோன நீர்க் கரடிகளை ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் சமீபத்தில் உயிருடன் மீட்டுள்ளனர். இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? அவர்கள் சொன்ன இன்னொரு தகவல் தூக்கிவாரிப் போடக்கூடியதாக இருக்கிறது. உறைந்துபோகிற குளிரிலும், அவை இனப்பெருக்கம் செய்து 19 முட்டைகளை இட்டு, அதில் 14 முட்டைகளிலிருந்து அடுத்த வம்சமும் வெற்றிகரமாக வந்துள்ளன என்பதுதான் அந்தத் தகவல்!