உயிர் மூச்சு

இது ‘பசுமை சிரிப்பு’

ஆதி

தேசிய காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8

பார்த்தவுடன் பட்டென்று பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது சிரிப்பு. ஆனால், அது வாயுடன் நின்று விடுவதில்லை. மூளையைப் பலமாகத் தட்டி, சிந்திக்கச் சொல்கிறது. அதுதான் ரோஹன் சக்ரவர்த்தியின் கோடுகளும் வண்ணங்களும் செய்யும் மாயம்.

இன்றைக்கு இயற்கை அங்குலம் அங்குலமாகச் சிதைக்கப்படுகிறது. இதற்கு எதிராகப் பலர் ஓங்கிக் குரல் கொடுக்கிறார்கள், சிலர் எழுதுகிறார்கள், இன்னும் சிலர் பேசுகிறார்கள். ஆனால், இந்த வேலைகள் அனைத்தையும் தன் கேலிச்சித்திரத்தில் வடித்துக்கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார் ரோஹன். அரை பக்கக் கட்டுரையில் சொல்லும் விஷயத்தை, இரண்டே வாக்கியங்களில் பட்டென்று புரிய வைத்துவிடுகிறார்.

புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் சீரழிவு, காட்டுயிர் கடத்தல் என நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும் ஒவ்வொரு அம்சத்தையும் தன் கேலிச்சித்திரத்தால் ரோஹன் கேள்விக்கு உட்படுத்துகிறார். பருவநிலை மாற்றத்தால் சுந்தரவனக் காடுகள் அழிவது தொடர்பான ஓவியங்களுக்காக ஐ.நா. வளர்ச்சித் திட்டம், ஃபிரெஞ்சு அரசு ஆகியவற்றின் முதல் பரிசைப் பெற்றவர்.

ரோஹன் சக்ரவர்த்தி

இனி, ரோஹனின் கைகள் செய்த வித்தைகள்:

SCROLL FOR NEXT