தென்கிழக்கு ஆசியக் காடுகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு வேளை நீங்கள் போனால், நடுக் காட்டுக்குள் 'பாப்கார்ன்' வாசனை உங்கள் மூக்கைத் துளைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
வேறொன்றுமில்லை, கரடி போன்ற பூனையின் (பியர்கேட்) திரவக்கழிவை நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதர காட்டுயிர்களைப் போலவே கரடிப்பூனையும், தனது பிரதேசத்தை அடையாளப்படுத்தி மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்கு, தான் இருக்கும் இடத்தைச் சுற்றிச் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது.
இந்தச் சிறுநீரில் '2 அசிடைல் பைரோலின்' என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதுதான் 'பாப்கார்ன்' வாசனைக்குக் காரணம்.