பட்டாசு வெடிப்பதற்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் உள்ள தொடர்பு காரணமாக, பட்டாசு வெடிப்பதற்குக் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்:
இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதைத் திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பட்டாசுகளுக்கும் காற்று மாசுபாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இது குறித்த ஆய்வுகள் தேவை.
மேற்கு வங்கத்தில் 90 டெசிபலுக்கு மேல் சத்தமெழுப்பும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோல, பட்டாசுகளின் சத்தத்துக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
பட்டாசுகளில் இடம்பெற்றுள்ள வேதிப்பொருட்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகளை பட்டாசுப் பொதிவுகளின் மீது அச்சிடப்பட வேண்டும்.
பட்டாசு உற்பத்தியில் ஆபத்தான வேதிப்பொருள் பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும்.
- நேயா