உயிர் மூச்சு

ரசாயனமில்லா நொறுக்குத்தீனி

பார்க்கவி பாலசுப்ரமணியன்

இயற்கை உணவு வகைகள் என்றாலே முழுவதும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருள்தான் என்பதை எப்படி நம்புவது என்ற கேள்வி வர ஆரம்பித்ததற்கு என்ன காரணம்? அதிலும் நிறைய பெருநிறுவனங்களின் ‘பிராண்டட் பொருட்கள்’ வர ஆரம்பித்ததுதான். ஆனால், இந்தப் பிராண்டட் பொருட்கள் இல்லாத பசுமை அங்காடிகளும் சென்னையின் சில பகுதிகளில் உள்ளன.

வேளச்சேரியில் அமைந்திருக்கும் ‘வெர்டியூர் இயற்கை அங்காடி’யில் தேனும் இயற்கை நொறுக்குத்தீனிகளும் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. பிராண்டட் பொருட்கள் எதுவுமே இல்லாத கடைகளில் இதுவும் ஒன்று.

உரிமையாளர் குரல்:

“நான் எல்லாப் பொருட்களையுமே நேரடியா விவசாயிகளைச் சந்தித்துத்தான் வாங்கிவருகிறேன். இதனால் விலையையும் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது. இவை அனைத்தையும் நானே நேரில் பார்த்து வாங்கிவருவதால், இங்கு இருக்கும் எல்லாப் பொருட்களும் உறுதியாக இயற்கையான முறையில் தயாரானவை என்ற உறுதியை என்னால் தர முடியும்" என்கிறார் இந்த நிறுவனத்தன் உரிமையாளர் சவீதா.

சிறப்பு அம்சங்கள்:

தேன், நெய், பாரம்பரிய நொறுக்குத்தீனிகள்.

வாடிக்கையாளர் குரல்:

"இந்தக் கடையில் எல்லாமே கூடையிலதான் வச்சிருக்காங்க. வாங்கும்போதே புதுசா இருக்கும் பழங்களைப் பார்க்கும்போதே, இவை நல்லதுதான்னு புரிஞ்சுக்க முடியும். முழுசும் இயற்கையா விளைஞ்சதால சுவையைப் பத்தி, தனியா சொல்லத் தேவையில்ல. ரொம்பவே நல்லா இருக்கும்" என்கிறார் வாடிக்கையாளர் சிவரஞ்சனி.

இந்த இயற்கை அங்காடியில் பிராண்டட் பொருள்கள் இல்லாமல் இருப்பதால், நமது பாரம்பரிய வணிகம் மறுமலர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நமது இயற்கை விவசாயிகளின் முன்னேற்றம், இது போன்ற முயற்சிகளால்தான் வளர்ச்சி அடைகிறது.

தொடர்புக்கு: 8754501136, www.verdureorganics.com, savitha@verdureorganics.com

SCROLL FOR NEXT