உயிர் மூச்சு

எறும்புகளின் உயிர்ப் பாலம்

நவீன்

மிகவும் சிக்கனமான ஒரு பாதையில், கடினமான நிலப்பரப்பை எப்படிக் கடப்பது என்று தீவிரமாக யோசிக்கிறீர்களா? ராணுவ எறும்புகள் உங்களுக்குச் சிறந்த வழியைக் காட்டும். எப்படி? அவை சென்றுகொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் இடைவெளி தென்பட்டால், அதை இட்டு நிரப்புவதற்குத் தங்களுடைய உடலை மற்ற எறும்புகளின் உடலோடு இணைத்து, ஒரு பாலத்தை அவை உருவாக்கிவிடுகின்றன. அவற்றின் கால்களில் உள்ள கொக்கி போன்ற அமைப்பைப் பயன்படுத்தி இந்த 'உடல் இணைப்பை' சாத்தியப்படுத்துகின்றன. எறும்புக் கூட்டத்தில் உள்ள வேலைக்கார எறும்புகள்தான் இத்தகைய பணிகளில் ஈடுபடுகின்றன என்பது கூடுதல் தகவல்!

SCROLL FOR NEXT