உயிர் மூச்சு

முன்னத்தி ஏர் 30: கண் முன்னே பெருகும் வளம்

பாமயன்

என்னுடைய நிலத்தின் மண்ணில் வளம் பெருகுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மண்ணின் ஈரம் காக்கும் தன்மை அதிகரிப்பதையும் காண முடிகிறது,” என்கிறார் மணி.

இத்தனை சிறப்புகள் இருந்தும், இவருடைய வயலுக்கு வேலையாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதுவும் திறன்மிக்க வேலையாட்கள் கிடைப்பது மிகமிக அரிதாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், இயற்கை முறைக் காய்கறிகளுக்குப் போதிய அளவில் சந்தை வாய்ப்புகள் இல்லை. வாங்கி விற்பவர்களும் உழவர்களுக்கு உரிய விலையைத் தருவதில்லை. அதேநேரம் நஞ்சில்லாத உணவு வேண்டும் என்று விரும்பும் நுகர்வோரும், பருவத்துக்குப் பருவம் வரும் காய்கறிகளை உண்ண விரும்புவதில்லை. எல்லாக் காலங் களிலும் கேரட்டும் முட்டைக்கோசும் கேட்கின்றனர். இதன் விளைவாக ரசாயனம் கலந்த காய்கறிகளே எளிதில் கிடைக்கின்றன என்பது இவரது ஆதங்கம்

கூட்டு சந்தைப்படுத்துதல்

கத்தரி தவிரப் புடலை, பாகல், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும், பப்பாளி, வாழை போன்ற பழங்களையும் இவர் சாகுபடி செய்கிறார். கீரை பயிரிடுவதற்காக அடுத்த நிலம் தயாரிப்பில் இருக்கிறது. பப்பாளியும் வாழையும் காய்ப்பில் உள்ளன. சொட்டுநீர்ப் பாசனமுறையையும் பயன்படுத்துகிறார்.

தனது பஞ்சாலைத் தொழிலை முற்றிலும் துறந்துவிட்டு முழுநேர இயற்கை வேளாண் பண்ணையாளராக மாறியுள்ள மணி, மற்ற உழவர்களுக்கு ஒரு முன்னத்தி ஏராக வழிகாட்டுகிறார். இவருடன் இணைந்து காந்தி ராஜா என்ற ஆர்வலரும் இயற்கை வேளாண்மையைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டாகச் சாகுபடி செய்து காய்கறிகளைச் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அருகில் உள்ள இயற்கை வேளாண்மை அங்காடிகள் இவர்களுடன் இணைந்து செயல்படலாம்.

மீன்பாகு திரவ ஊட்டம், முக்கூட்டு எண்ணெய் தயாரிப்பு முறைகள்:

முக்கூட்டு எண்ணெய்

தேவையான பொருட்கள்:

மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் டப்பா - ஒன்று

மீன் - 1 கிலோ

வெல்லம் - 1 கிலோ

தயாரிப்பு முறை

மீனைச் சிறு துண்டுகளாக வெட்டி டப்பாவில் போடவும். கழிவு மீன்களாக இருந்தாலும் குற்றமில்லை. நன்கு பொடி செய்த வெல்லத்தை இத்துடன் சீராக, அடுக்கடுக்காகக் கலக்க வேண்டும். அதாவது ஒரு அடுக்கு மீன், அடுத்த அடுக்கு வெல்லம். கடையடுக்கில் வெல்லத்தைப் போட்டு நிறைவு செய்து டப்பாவை நன்கு காற்று புகாமல் மூட வேண்டும். 30 நாட்கள் கழித்து நன்கு நொதித்து அந்த மீன் துண்டுகள் கரைந்து தேன் போன்ற நிலையை அடையும். கவுச்சி நாற்றம்கூட இருக்காது. கிட்டத்தட்டப் பேரீச்சம் பழ நாற்றம் கிடைக்கும். இதை எடுத்து 10 லிட்டருக்கு 50 முதல் 100 மில்லி என்ற அளவில் நீர் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

மீன் பாகு (மீன் அமினோ அமிலம்)

தேவையான பொருட்கள்:

வேப்ப எண்ணெய் - 100 மி.லி.

புங்கன் எண்ணெய் - 100 மி.லி.

இலுப்பை எண்ணெய் - 100 மி.லி.

மண்ணெண்ணெய் - 10 மி.லி.

தயாரிப்பு முறை:

இந்த மூன்றையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின்னர் 5 லிட்டர் நீருடன் சிறிது காதி சோப் அல்லது குளியல் சோப்பைச் சேர்த்துக் கரைக்க வேண்டும். இந்தக் கரைசலை எண்ணெய்க் கரைசலுடன் சேர்த்து நன்கு கலக்கினால் பால் போன்ற திரவம் கிடைக்கும். இதை 10 லிட்டர் நீருக்கு 100 மி.லி. என்ற அளவில் சேர்த்துத் தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும்இயற்கை வேளாண் வல்லுநர். தொடர்புக்கு: adisilmail@gmail.com

மணி தொடர்புக்கு: 98421 21562

SCROLL FOR NEXT