கோவை நிர்மலா கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் 'உயிர் மூச்சு' இணைப்பிதழ் பாராட்டப்பட்டது.
கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும், கோவை இன்ஸ்பயர் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனமும் இணைந்து ‘நவீன இலக்கியங்களில் சூழலியல் பதிவுகள்' என்ற தேசியக் கருத்தரங்கைச் சமீபத்தில் நடத்தின. பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ‘தி இந்து' - ‘உயிர் மூச்சு' இணைப்பிதழில் வெளியான கட்டுரைகள் பற்றி அலசப்பட்ட கட்டுரை வாசிக்கப்பட்டது.
‘தமிழ் நாளிதழ்களில் ‘தி இந்து' மட்டுமே சூழலியலுக்கு முக்கியத்துவம் அளித்து, தனித்துவத்துடன் இந்த இணைப்பிதழைக் கொண்டுவருகிறது' என்று அந்த ஆய்வுக் கட்டுரை பாராட்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சகோதரி அ. அருள்சீலி.
கருத்தரங்கில் எழுத்தாளர் நக்கீரன் பேசியபோது, “மற்ற துறைகளுக் கெல்லாம் தந்தை உண்டு. ஆனால், சுற்றுச்சூழல் துறையில் ‘சூழலியல் தாய்’ என்றே அழைக்கப்படுவதும், உணரப்படுவதும் அதன் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இன்றைய சுற்றுச் சூழலின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நவீன இலக்கிய முயற்சிகள் வர ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றம்” என்று கூறினார்.
கருத்தரங்கில் 75 கட்டுரையாளர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள், 450 பக்கங்கள் கொண்ட புத்தகமாக ‘நவீன இலக்கியங் களில் சூழலியல் பதிவுகள்' என்ற புத்தகமாக வெளியாகியுள்ளது.