உயிர் மூச்சு

ஆளில்லா விமானம்

செய்திப்பிரிவு

ஆளில்லா குறு விமானங்களைப் பயன்படுத்தி குறைந்த பூச்சிக்கொல்லி மூலம், அதிகப் பரப்பிலான பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான ஆளில்லா குறு விமானங்களைத் தயாரிக்க சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (MIT) வான் ஊர்தி ஆராய்ச்சி மையம் தயாரிக்க உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதற்கான ஆயத்த வேலைகள் நடந்துவருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வான் ஊர்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக 5 ஆயிரம் ஆளில்லா குறு விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

வெற்றிலையில் வேர்ப் புழுத் தாக்குதல்

தேனி மாவட்டத்தில் விளை விக்கப்படும் வெற்றிலைவேர்ப் புழுத் தாக்குதலால் பாதிக்கப் படுகிறது. தொடர்ந்து வேர்ப் புழுத் தாக்குதலால் வெற்றிலை பாதிக்கப்பட்டுவந்ததால் சிறுகமணி என்னும் கலப்புரக வெற்றிலை கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்டுவந்தது. இப்போது அதுவும் வேர்ப்புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஆயிரம் டன் மிளகாய் வற்றல் சேதம்

தேனியில் தனியார் மசாலா உற்பத்திக் கிடங்கில் மூன்று நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. குளிரூட்டப்பட்ட இந்தக் கிடங்கில் சேமித்துவைக்கப்பட்டிருந்த மிளகாய் வற்றல் மின் கசிவால் பற்றி எரியத் தொடங்கியது. இந்தத் தீ விபத்தில் 1,000 டன் மிளகாய் வற்றல் தீக்கு இரையாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த 17-ம் தேதி பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இம்முறை வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

SCROLL FOR NEXT