இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மரபு விதைகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் கண்காட்சி சென்னையில் இன்று (மே 23) நடைபெறுகிறது.
மான்சான்டோ போன்ற பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் இந்த பாரம்பரிய விதைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.நகர் வெங்கட் நாராயணா சாலை நந்தனம் சிக்னல் அருகேயுள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் பிற்பகல் 3 மணி முதல் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பு, ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட், ஆஷா உள்ளிட்ட அமைப்புகள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் விளைபொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச் சாறு, பானங்கள், நொறுக்குத்தீனிகள் விற்பனை, இயற்கை வேளாண்மை - புதிய தலைமுறை விவசாயிகளுடன் கலந்துரையாடல், வீட்டுத் தோட்ட செய்முறை விளக்கம், பாரம்பரிய விதைக் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விவசாயிகள், இயற்கை வேளாண் ஆர்வலர்கள், வீட்டுத் தோட்ட ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு: 9790900887, 9600044748.