உயிர் மூச்சு

பருவ நிலை மாற்றம்: ஐ.நா.வின் 19-வது மாநாட்டில் இந்தியாவின் எண்ணம் நிறைவேறுமா?

செய்திப்பிரிவு

உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது பருவ நிலை மாற்றம். மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து நாடுகளும் ஆண்டுதோறும் கலந்துரையாடும் 19-வது சர்வதேச மாநாடு, போலந்தில் இன்று (திங்கள்கிழமை) துவங்குகிறது.

இதில், இந்தியா முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு உலக நாடுகள் செவி கொடுக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனித செயல்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல‌ வாயுக்கள்தான் பருவ நிலை மாற்றத்துக்கும் காரணம் என்று செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டது.

"பசுமைப் பருவநிலை நிதியம்' ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள்தான் இம்மாநாட்டின் மைல்கற்களாக இருக்கும். முந்தைய மாநாடுகளில் இதற்கு ஒப்புதல் அளித்த வளர்ந்த நாடுகள் சமீபகாலமாக இதற்கு மாற்றான விஷயங்களை முன்னெடுக்கின்றன" என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இம்மாநாடு குறித்து பருவநிலை மாற்ற ஆய்வாளர் சலீம் கான், 'தி இந்து'விடம் கூறும்போது, "'பசுமைப் பருவநிலை நிதியம்' அமைப்பது மற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதில் அனைத்து நாடுகளும் சமமான பங்களிப்பு செய்வது ஆகியவையே இம்மாநாட்டில் இந்தியா முன் வைக்கும் முக்கிய விஷயங்களாக‌ இருக்கலாம்" என்றார்.

SCROLL FOR NEXT